வீதி விபத்து, மரணங்களைத் தடுப்பது பொலிஸாரின் பாரிய பொறுப்பு
வீதி விபத்து, மரணங்களைத் தடுப்பது
பொலிஸாரின் பாரிய பொறுப்பு
இலங்கையில் மட்டுமல்ல இந்தியா, பாகிஸ்தான், பங்களா தேஷ், மலேசியா போன்ற நாடுகளில்
இன்று நெடுஞ்சாலைகள் துரிதவேகமாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றதை அடுத்து
இந்நாடுகளில் வீதி விபத்து மரணங்களும் நாளாந்தம் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
சுமார் 50 ஆண்டு களுக்கு முன்னர் இந் நாடுகளில் வீதிகள் மிகவும் ஒடுக்கமாக இருந்த
காரணத் தினால் வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்திச் செல்வதற்கு வீதிகளில் இடவசதி
இருக்கவில்லை. அத்துடன் அன்று இப்போது இருப்பது போன்று இலட்சக்கணக்கான கார்கள்,
முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக் கிள்கள் வீதிகளில் பயணிக்கவில்லை.
இன்று மக்களின் வாழ்க்கையே ஒரு போராட்டமாக அமைந்திருப்பதனால் எல்லோரும் எல்லா
விசயத்திலும் அவசரப் போக்கைக் கடைப்பிடிக்கின் றார்கள். வாகனங்கள் இருப்பத னால் 5
நிமிடங்களுக்குள் அல்லது 10 நிமிடங்களுக்குள் ஓரிடத்தை சென்ற டையலாம் என்ற
எண்ணத்துடன் வாகனங்களை வேகமாக ஓட்டிச் செல் லும் போது விபத்து மரணங்கள்
ஏற்படுகின்றன.
வீதி விதிகளைக் கடைப்பிடிக்காமல் ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு வேகமாகச் செல்லுதல்,
வெள்ளை கோட்டைக் கடந்து மறுபக்கத்திலும் வாகனங்களை ஓட்டுதல் மது போதையில் வாகனங்களை
ஓட்டுதல், மிதமிஞ்சிய வேகத்தில் வாகனங்களை ஓட்டுதல் ஆகியனவே இந்த விபத்து
மரணங்களுக்கு காரணங்கள் ஆகும்.
பொலிஸார் கண்டிப்பான முறையில் வீதி விதிகளை அமுலாக்கி விதிகளை மீறி வாகனங்களை
ஓட்டிச் செல்பவர்களின் தராதரம் பார்க்காமல் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து
அவசியமாயின் வாகன அனுமதிப் பத்திரங்களை வாழ் நாள் பூராவும் இரத்துச் செய்யவும்
வேண்டும்.
மேற்கத்திய நாடுகளில் வாகன விபத்துக்கள் இடம் பெற்றாலும் அங்கு இந்தளவுக்கு வீதி
விபத்து மரணங்கள் ஏற்படுவதில்லை.
அதற்கு அந்நாடுகளின் பொலிஸார் வீதி விதிகளை கடுமையாக நடைமுறைப் படுத்துவதே
காரணமாகும். எனவே இன்று இலங்கையில் நாள் ஒன்றுக்கு 6 முதல் 7 பேர் வீதி
விபத்துக்களில் மரணிப்பதை தடுக்க வேண்டுமாயின் பொலிஸார் கடுமையாக குற்றம் இழைக்கும்
வாகன ஓட்டிகளைத் தண்டிப்பது அவசியமாகும்.