வாடிக்கையாளர்களுக்கும் வங்கிகளுக்கும் நட்புறவு இருந்தால் பொருளாதாரம்
வளமடையும்
வாடிக்கையாளர்களுக்கும் வங்கிகளுக்கும்
நட்புறவு இருந்தால் பொருளாதாரம் வளமடையும்
ஒரு நாட்டின் பொருளாதாரம் துரித வேகத்தில் அபிவிருத்தி அடைய வேண்டுமானால்
வங்கிகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும், வங் கிகளுக்கும் பொதுமக்களுக்கும்
இடையில் நெருக்கமான நட்புறவு இருப்பது அவசியமாகும். எந்தவொரு தொழில் துறையோ,
வர்த்தக நிறு வனமோ பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்து முன்னேற்றமடைவத ற்கு
அவற்றிற்கு வங்கிகளின் உதவியும் ஒத்தாசையும் அவசியமாகும்.
அது போன்றே சாதாரண பொதுமக்களுக்கும் தங்கள் பொருளாதாரத்தை வளர்த்து வாழ்க்கையில்
வெற்றியடைவதற்கு வங்கிகளின் உதவி அவசிய மாகும். இந்த நோக்கத்துடனேயே வர்த்தக
வங்கிகள் செயற்படுகின்றன.
எமது கைவசம் உள்ள பணத்தை நாம் கையிலேயே வைத்திருந்தால் அந்
தப் பணம் எங்களை அறியாமலேயே செலவாகிவிடும். அதனால்தான் தனி யார் நிறுவனங்களும்
தனிப்பட்ட மனிதர்களும் வங்கிகளில் கணக்குகளை ஆரம்பித்து அந்தப் பணத்தை வைப்புச்
செய்கிறார்கள்.
பொதுமக்களும், தனியார் நிறுவனங்களும், பெரும் செல்வந்தர்களும் வங்கிக ளில் வைப்புச்
செய்யும் பணத்திற்கு சம்பந்தப்பட்ட வங்கிகள் நியாயமான வட்டியை வைப்பு
செய்தவர்களுக்கு மாதா மாதம் அல்லது வருடத்திற்கு ஒரு தடவை வழங்குகிறது. கூடுதலான
வட்டியை பெற விரும்பினால் மக் களும், தனியார் நிறுவனங்களும் ஓராண்டுக்கு அல்லது
ஈராண்டுக்கு அல் லது ஐந்தாண்டுகளுக்கு நிரந்தர வைப்புக் கணக்கில் தங்கள் பணத்தை
வங்கி வைப்பில் இடுகின்றன.
இவ்விதம் குறிப்பிட்ட காலத்திற்கு வங்கியில் வைப்புச் செய்யப்படும் பணத் திற்கு
சாதாரண வைப்புக்கு கொடுக்கப்படும் வட்டியை விட கூடுதலான வட்டியை வங்கிகள்
வழங்குகின்றன. பொதுமக்களிடம் இருந்தும், தனி யார் நிறுவனங்களிடம் இருந்தும்,
கோடீஸ்வர செல்வந்தர்களிடம் இருந் தும் வைப்பாக பெரும் பணத்தை வங்கிகள் தன்னகத்தே
முடக்கி வைத்தி ருந்தால் வைப்பு செய்த பணத்திற்கு வட்டியை செலுத்த முடியாமல் அந்த
வங்கி நஷ்டத்தினால் திவாலாக வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்படும்.
ஆகவே, வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்கள் வைப்புச் செய்த பணத்தை
தனிப்பட்டவர்களுக்கும், நிறுவனங்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கு தாம் செலுத்தும்
வட்டியை விட கூடுதல் வட்டிக்கு கடனாக கொடுக் கின்றன. இவ்விதம் வங்கிகளுக்கு
கிடைக்கும் கூடுதலான வட்டியே வங் கிகளின் மூலதனமாகவும், இலாபமாகவும்
வளர்ச்சியடைகின்றன.
வங்கிகளிடம் கடன் வாங்கும் வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு விசுவாசமா கவும்
வாடிக்கையாளர்களிடம் இருந்து மிதமிஞ்சிய தொகையை வைப் பாக ஏற்றுக் கொள்ளும் வங்கிகள்
வாடிக்கையாளர்களுக்கு விசுவாசமாக வும் நடக்க வேண்டும். இவ்விரு தரப்பிலும்
நேர்மையும் விசுவாசமும் இரு ந்தால் இருசாராரும் நன்மை அடைவதுடன், நாட்டின்
பொருளாதாரமும் தலைத்தோங்கும். அத்துடன் சாதாரண சம்பளத்தைப் பெறும் ஒருவருக்கு
வங்கிக் கடனை மையமாக வைத்து தனக்கென சொந்தமாக வீடொன்றை கட்டிக்கொள்ளும் வாய்ப்பும்
கிடைக்கும்.
அவ்விதம் வீடமைப்புக்கு எடுக்கப்படும் கடன் பணத்தை அவர் வங்கியை ஏமாற்றிவிடாமல்
மாதாந்த தவணையில் அதன் வட்டியுடன் செலுத்துவது அவசியம். பொதுவாக இத்தகைய வீடமைப்பு
கடன் பெறுபவர்களின் சம் பளத்தில் இருந்தே வீடமைப்பிற்கான மாதாந்த தொகை வங்கிக்கு
நேரடி யாக அனுப்பப்படுவதும் உண்டு.
வீடமைப்புக் கடன் முடிவு பெறுவதற்கு முன்னர்
சம்பந்தப்பட்டவர் தொழிலில் இருந்து இராஜிநாமா செய்ய வேண் டிய நிலைக்கு அல்லது
இளைப்பாற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட் டாலும் சம்பந்தப்பட்டவர் வங்கிக்கு அளித்த
உறுதி மொழிக்கு அமைய மாதாந்தம் கடன் பட்டாவது அந்த தொகையை செலுத்த வேண்டும்.
இவ்விதம் மாதாந்த கடன் தொகையை சம்பந்தப்பட்டவர் செலுத்தத் தவறி னால் அந்தக் கடனுக்கு
உத்தரவாதம் அளித்து, உறுதி கையெழுத்திட்ட வர் அந்தக் கடனை செலுத்த வேண்டிய நிலைக்கு
தள்ளப்படுவார். இவ் விதம் வங்கிக் கடனை செலுத்த தவறுபவர்களுக்கு எதிராக வங்கிகள் வழ
க்கு தொடர்ந்து நீதிமன்றம் மூலம் அந்தப் பணத்தை மீளப் பெறுவதற்கும் சட்டம்
இடமளிக்கிறது.
மேற்கத்திய உலகில் மனிதர்களின் வாழ்க்கைக்கு உதவி செய்யும் எண்ணத்து டன் இந்த
வங்கிக் கடன் முறை அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கமைய எமது நாட்டில் உள்ள
பெரும்பான்மையான வங்கி வாடிக்கையாளர்கள் வங்கியில் இருந்து தாம் பெற்ற கடனை மீள
செலுத்த தவறுவதில்லை.
அது போன்றே, கடன் அட்டைகளையும் வாடிக்கையாளர்களுக்கு உதவு
முகமாகவே வங்கிகள் அறிமுகம் செய்தன. கடனட்டைகளைப் பயன்படு த்தி வாடிக்கையாளர்கள்
விரும்பினால் ஏ.ரி.எம். இயந்திரங்களின் ஊடாக பணத்தை எடுக்கலாம். அல்லது கடனட்டையை
கொடுத்து தங்களுக்கு தேவையான பொருட்களை கடைகளில் இருந்து வாங்கலாம்.
கடனட்டை மூலம் செலவிடும் பணத்தை ஒருவர் மாதாந்தம் செலுத்த வேண் டும்.
வாடிக்கையாளருக்கு உதவும் முகமாக வங்கிகள் அவர் எடுத்த முழுத் தொகையில் 5
சதவீதத்தையாவது செலுத்த வேண்டுமென்ற நிபந்த னையை கடைப்பிடிக்கிறது.
இவ்விதம் ஒருவர்
5 சதவீதத்தை மாத்திரம் செலுத்தினால் வங்கிக்கு அவர் செலவு செய்த தொகையில் இருந்து
கூடு தலான வட்டியை பெற முடியுமென்ற சுயநல நோக்கத்துடன் தான் வங்கி கள் இந்த சலுகையை
அவர்களுக்கு கொடுக்கின்றன.
இலங்கையில் இவ்விதம் வங்கிக் கடன் பெற்று இனிமேல் வங்கிக் கடனை என்றுமே பெறமுடியாத
தகுதியற்றவர்களாக 15 இலட்சம் பேர் இனம் காண ப்பட்டுள்ளார்கள். இதனால் இவர்கள்
Black Listed என்ற கறுப்புப் பட்டி யலில் உள்ளடக்கப்பட்டுள்ளார்கள்.
அது போன்று
கடனட்டையின் கொடு ப்பனவுகளை செலுத்த தவறிய சுமார் 5 இலட்சம் பேரும் இவ்விதம் தகு
தியற்றவர் பட்டியலில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு வாழ்நாள் பூராவும் வங்கிகளில் கடன்
பெறவோ, கடனட்டைகளை பயன்படுத்தவோ இடமளி க்கப்படமாட்டாதென்று இப்போது நீதிமன்றங்களின்
ஊடாக தீர்மானிக்கப் பட்டுள்ளது.
வங்கிக் கடனையும், கடன் அட்டைகளையும் ஒவ்வொருவரும் ஏன் தனியார் நிறுவனங்களும்
நியாயமாக பயன்படுத்தி தங்கள் பொருளாதார பிரச்சி னைகளை தீர்த்துக் கொள்ள
முயற்சித்தால், நிச்சயம் இந்தளவு பெருந் தொகை யினர் இத்தகைய தண்டனைக்கு முகம்
கொடுத்திருக்க முடியாது.