கிரிக்கெட் போட்டியில் நடுவரின் முடிவை மறுபரிசீலனைக்கு உட்படுத்தும் (டிஆர்எஸ்)
முறையை கட்டாயமாக்க வேண்டுமென சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ சி சி) செயற்குழுக்
கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை (பி சி. சி. ஐ) இதற்கு மீண்டும் தனது
எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
“பால் டிராக்கிங் சிஸ்டம் ஹாட்ஸ்பாட் கமரா ஆகிய தொழில்நுட்பங்களில் ஐ. சி சி. யின்
செயற்குழு முழுநம்பிக்கை கொண்டுள்ளது. இதன் துல்லியதன்மை வல்லுநர்களால்
ஆராயப்பட்டுவிட்டது. எனவே அனைத்து டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் டி.ஆர்.
எஸ். முறையை அமுல்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும்’ என்று ஐ.சி.சி. செயற்குழு
பரிந்துரைத்துள்ளது.
இது தவிர டி. ஆர். எஸ். முறைப்படி, எல். பி. டபிள்யூ. முறையில் அவுட் ஆவதை முடிவு
செய்வதில் சில மாற்றங்கள் கொ ண்டு வரப்பட் டுள்ளன. டெஸ்ட் போட்டியில் ஒரு
இன்னிங்ஸில் இரு முறையும், ஒருநாள் போட்டியில் ஒரு முறையும் டி.ஆர். எஸ். முறைப்படி
நடுவரின் முடிவை பரிசீலிக்க வீரர்கள் கோரிக்கை விடுக்க முடியும்.
இது தவிர பவர் பிளே முறையிலும், 30 யார் வட்டத்துக்குள் குறிப்பிட்ட எண்ணிக்கையில்
வீரர்களை நிறுத்தும் முறையிலும் மாற்றம் கொண்டுவரவும், டெஸ்ட் போட்டிகளை பகல்-
இரவாக நடத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் டி.ஆர்.எஸ். முறையை ஏற்க முடியாது என்ற தனது நிலைப்பாட்டில் பிசிசிஐ
உறுதியாக உள்ளது. இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளில் டிஆர்எஸ் முறை இருக்காது என்று
பிசிசிஐ கூறியுள்ளது.