ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் மாதம் பிறை 06
நந்தன வருடம் ஆனி மாதம் 13ம் திகதி புதன்கிழமை
WEDNESDAY ,JUNE, 27, 2012
வரு. 80 இல. 151
 
இராமேஸ்வரத்தில் இந்திய மீனவர்கள் தாக்கப்படவில்லை

இராமேஸ்வரத்தில் இந்திய மீனவர்கள் தாக்கப்படவில்லை

இலங்கை கடற்படைப் பேச்சாளர்

கச்சதீவு அருகே ராமேஸ்வரம் மீனவர் கள் இலங்கை கடற்படையினரால் நேற்று அதிகாலை 5 மணியளவில் தாக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியை இலங்கை கடற்படையின் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய முற்றாக மறுத்துள்ளார்.

600 வள்ளங்களில் 2500 ராமேஸ்வரம் மீனவர்கள் இந்திய கடல் எல்லையில் கச்சதீவு அருகே மீன் பிடித்துக்கொண் டிருந்தபோது இலங்கை கடற்படையினர் வந்து அடித்து விரட்டியதாகவும், வலைகளை அறுத்ததாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இது தொடர்பாக இலங்கை கடற்படையின் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரியவிடம் கேட்டபோதே அவர் இவ்வாறான சம்பவமொன்று நடைபெறவில்லையெ ன்றும் அந்தச் செய்தியை முற்றாக மறுப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவின் தமிழக மீனவர்களை அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் ஈடுபடுவது மட்டு மல்லாமல் விணான குற்றச்சாட்டுக் களையும் சுமத்துகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி