ஹிஜ்ரி வருடம் 1433 ரஜப் மாதம் பிறை 30
நந்தன வருடம் ஆனி மாதம் 07ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY ,JUNE, 21, 2012
வரு. 80 இல. 146

இரகசிய முதலீடுகள் தொடர்பில் கணக்காய்வுத்துறை விசாரணை:

90 அரச நிறுவனங்களில் 1000 கோடி ரூபா மோசடி அம்பலம்

கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்கள் பல அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானத்தை செலுத்தாது இரகசியமாக பல்வேறு வீண் விரயங்களுக்கு செலவிடுவதுடன், அவைகளினால் சுமார் ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான தொகை வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக கணக்காய்வு விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.சுமார் 90 கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்கள் இவ்வாறு அரசாங்கத்திற்கு தெரியாதவாறு நிதி கொடுக்கல் வாங்கல் மோசடியில் ஈடுபட்டுள்ளன.

விவரம் »

பிரதேச மற்றும் நகர சபைகளின் புதிய எல்லைகளை நிர்ணயிக்கும் பணியை ஒழுங்கு முறைப்படுத்தி நவீன சனத்தொகை சமூகம், கலாசாரம், சூழல் போன்ற கோட்பாடுகளின் மீது புதிய பிரதேச சபையின் அதிகாரப் பிரதேசத்தை உருவாக்குவேன்.
 

- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

பிரேசில் ‘ரியோ+20’ மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த பங்கேற்பு

பல்வேறு நாடுகளின் தலைவர்களை தனித்தனியே சந்தித்து பேச ஏற்பாடு

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி தொடர்பான ரியோ + 20 மாநாட்டில் பங்குபற்றுவ தற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுமுன்தினம் பிரேசில் நாட்டின் ரியோ டீ ஜெனய்ரோ நகருக்குப் பயணமானார். ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி தொடர்பான இம்மாநாடு நேற்று ஆரம்பமானதுடன் நாளை மறுதினம் 23 ஆம் திகதி வரையும் நடைபெறவிருக்கின்றது.

விவரம் »


அரசாங்க செலவில் காத்தான்குடியில் புதிய பள்ளிவாசல் ஒன்றை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் கைச் சாத்திடும் நிகழ்வு பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான விசும்பாயாவில் நேற்று இடம்பெற்றது. புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சின் செயலாளர் கெசியன் ஹேரத், மத்திய பொறியியல் கட்டட பணியகத்தின் தலைவர் நிஹால் ரூபசிங்க ஆகியேர் கையொப்பமிடுவதையும், பிரதி அமை ச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உட்பட முக்கியஸ்தர்கள் மத்தியில் நிற்பதையும் காணலாம்.

மூன்று வருடத்துள் 349 திட்டங்கள் 48,422 தொழில் வாய்ப்புகள்

முதலீட்டுச் சபை சட்டத்தின் கீழ் கடந்த 3 வருடத்தில் 349 திட்டங்கள் ஆரம் பிக்கப்பட்டதோடு இதனூடாக 48, 422 தொழில் வாய்ப்புகள் உருவாக்க எதிர் பார்க்கப்பட்டது என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். வாய்மூல விடைக்காக ரவி கருணா நாயக்க எம்.பி. எழுப்பிய....

விவரம் »


கியூபாவிலிருந்து பிரேசில் சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், அந்நாட்டின் ரியோ டீ ஜெனய்ரோ நகர விமான நிலையத்தில் வரவேற்கப்படுகிறார்.
(படம்: சுதத் சில்வா)