ஹிஜ்ரி வருடம் 1433 ரஜப் மாதம் பிறை 30
நந்தன வருடம் ஆனி மாதம் 07ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY ,JUNE, 21, 2012
வரு. 80 இல. 146
 

காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து வான் தாக்குதல் ; 7 பேர் பலி

காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து வான் தாக்குதல் ; 7 பேர் பலி

தென் காசாவில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஒரு பலஸ்தீனர் கொல் லப்பட்டதோடு மற்றும்மொரு வர் காயமடைந்துள்ளார். இதன்மூலம் கடந்த மூன்று தினங்களாக இஸ்ரேல் நடத் தும் வான் தாக்குதலினால் காஸா பகுதியில் கொல்லப் பட்ட பலஸ்தீனர்களின் எண் ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.

காசவின் எகிப்து எல்லைப் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த பலஸ்தீனரை இலக்கு வைத்தே நேற்றைய தினம் இந்த வான் தாக்குதல் நடத்தப்பட் டுள்ளது.

எனினும் ஜிஹாத் அமைப்பைச் சேர்ந்த ஒருவரை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் வானொலி ஒன்று இராணுவத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளி யிட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை எகிப்து எல்லையில் இருந்து இஸ்ரேல் மீது ஆயுததாரி கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு இஸ்ரே லியர் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்தே இஸ்ரேல் காஸா பகுதி மீது தொடர்ச்சியான வான் தாக்கு தலை நடத்தி வருகிறது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி