விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அஸ்ஸாஞ் தென் அமெரிக்க நாடான இக்வடோரிடம்
அரசியல் தஞ்சம் கோரியுள்ளார். பிரிட்டனில் உள்ள இக்வடோர் தூதரகத்தில் அஸ்ஸாஞ்
அதற்கான கடிதத்தை சமர்ப்பித்து ள்ளார்.
சுவீடன் பெண்கள் இருவருக்கு எதிரான பாலியல்
குற்றச்சாட்டின் பேரில் அஸ்ஸாஞ்சை சுவீடனுக்கு நாடுகடத்துவதற்கு எதிராக பிரிட்டன்
நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மேன்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்தே
அஸ்ஸாஞ்ச் இக்வடோரிடம் அடைக்கலம் கோரியுள்ளார்.
இந்நிலையில் அஸ்ஸாஞ்சின் கோரிக்கையை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடு ப்பதாக
இக்வடோர் வெளியுறவு அமைச்சர் ரிகாடோ பிடினோ குறிப்பிட்டார். விக்கி லீக்ஸ் இணையதளம்
அமெரிக்காவின் ஆயிரக்கணக்கான ரகசிய ஆவணங்களை அம்பலப்படுத்தி சர்ச்சையை கிளப்பி யமை
குறிப்பிடத்தக்கது.