![]()
|
||
பெல்டிக் கடலாழத்தில் மர்மப் பொருள்சுவீடன் புதையல் வேட்டைக்காரர்களால் கடல் ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட aமர்மப் பொருள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
காளான் வடிவில் இருக்கும் இந்த பொருள் கடல்படுக்கையில் இருந்து 3 முதல் 4 மீற்றர் மேலெழுந்தவாரியாக உள்ளது. இதன் மேற்பரப்பில் முட்டை வடிவான துளை ஒன்றும் காணப்படுகிறது. அது ஒரு நுழைவாயில் போன்று காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது. "கடந்த 20 வருடங்களில் நான் 6000 தடவைகளுக்கு மேல் கடலில் முக்குழிந்திருக்கிறேன். இது போன்ற ஒன்றை எனது வாழ்க்கையில் பார்த்ததில்லை" என ஓஷியன் எகஸ் குழுவின் உறுப்பினர் ஸ்டிபன் ஹொக்பேர்ன் குறிப்பிட்டார். "எனக்கு அந்த பொருள் பற்றி விபரிக்க முடியாது. அது பற்றி விளக்கம் தேடி அங்கு மீண்டும் ஒருமுறை சென்றால் மேலும் கேள்விகளே அதிகரிக்கிறது" என்று அவர் மேலும் குறிப்பிட்டார். |
||
|
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். webmanager@lakehouse.lk |