ஹிஜ்ரி வருடம் 1433 ரஜப் மாதம் பிறை 30
நந்தன வருடம் ஆனி மாதம் 07ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY ,JUNE, 21, 2012
வரு. 80 இல. 146
 

பெல்டிக் கடலாழத்தில் மர்மப் பொருள்

பெல்டிக் கடலாழத்தில் மர்மப் பொருள்

சுவீடன் புதையல் வேட்டைக்காரர்களால் கடல் ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட aமர்மப் பொருள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கடலில் உள்ள புதையல்களை தேடும் "ஒஷியன் எகஸ் குழு" கடந்த ஆண்டு இந்த மர்மப் பொருளை கண்டுபிடித்தனர். சுவீடனுக்கும் பின்லாந்துக்கும் இடைப்பட்ட பெல்டிக் கடற்பகுதியில் சுமார் 85 மீற்றர் ஆழத்தில் இந்த மர்மப் பொருள் கண்டு பிடிக்கப்பட்டது. வட்டவடிவான இந்த பொருள் 60 மீற்றர் விட்டம் கொண்டது.

காளான் வடிவில் இருக்கும் இந்த பொருள் கடல்படுக்கையில் இருந்து 3 முதல் 4 மீற்றர் மேலெழுந்தவாரியாக உள்ளது. இதன் மேற்பரப்பில் முட்டை வடிவான துளை ஒன்றும் காணப்படுகிறது. அது ஒரு நுழைவாயில் போன்று காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

"கடந்த 20 வருடங்களில் நான் 6000 தடவைகளுக்கு மேல் கடலில் முக்குழிந்திருக்கிறேன். இது போன்ற ஒன்றை எனது வாழ்க்கையில் பார்த்ததில்லை" என ஓஷியன் எகஸ் குழுவின் உறுப்பினர் ஸ்டிபன் ஹொக்பேர்ன் குறிப்பிட்டார். "எனக்கு அந்த பொருள் பற்றி விபரிக்க முடியாது. அது பற்றி விளக்கம் தேடி அங்கு மீண்டும் ஒருமுறை சென்றால் மேலும் கேள்விகளே அதிகரிக்கிறது" என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி