நீண்ட காலமாக கிரிக்கெட் நேரடி வர்ணனையாளராக தன் திறமையைக் காட்டி வருகின்ற
பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் அத்துறையில் 30 ஆண்டு காலத்தைப் பூர்த்தி
செய் துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை சுயாதீன தொலைக்காட்சியின் ‘வசந்தம்’ ஒளிபரப்புச் சேவையின்
‘தலைவாசல்’ நிகழ்ச்சியின் போது இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் தற்போது
நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டிகள் சம்பந்தமான விமர்சனம் நடைபெற்றது. அப்போது
அஸ்வர் 30 ஆண்டுகால கிரிக்கெட் நேர்முக வர்ணனை குறித்து சுயாதீன தொலைக்காட்சியின்
தலைவர் ஒஸ்மன் சேனாரத்ன அஸ்வர் எம்.பிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்த விசேட ‘தலைவாசல்’ நிகழ்ச்சியை சயிலானி மயில்வாகனம் நெறிப் படுத்தியதோடு,
நிகழ்ச்சி முகாமையாளராக எம். குலேந்திரன் விளங்கினார்.
1982ம் ஆண்டு இலங்கை தனது முதல் டெஸ்ட் ஆட்டத்தினை இங்கிலாந்துக்கெதிராக கொழும்பு
ஓவல் மைதானத்தில் தற்போது சரவணமுத்து சர்வதேச விளையாட்டரங்கு- ஆடியபோது இலங்கை
அணியின் முதலாவது கப்டனாக விளங்கும் பந்துல வர்ணபுர அந்த அணிக்கு தலைமை
தாங்கியதையும், இங்கிலாந்து அணிக்கு கீத் பிளச்சர் தலைமை தாங்கியதையும் அஸ்வர்
எம்.பி. ஞாபகப்படுத் தினார்.
இங்கிலாந்து ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் அவுஸ்திரேலியாவிலும் தன் திறமைகளை
நிலைநாட்டிய இலங்கையைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான காமினி குணசேன
மற்றும் பாலித பெரேரா, பிரேமசார ஏபாசிங்க, சன்ன குணேசக்கர, எஸ். ஸ்கந்த குமார்
போன்ற பிரபல சிங்கள, ஆங்கில நேர்முக வர்ணனை யாளர்களோடு அஸ் வர் எம்.பி. தமிழில்
நேர்முக வர்ணனை செய்து வருவது குறிப்பிடத் தக்கது.
30 ஆண்டு கால மாக தமிழில் நேர் முக வர்ணனை செய்து வருகின்ற அஸ்வர் அவர்களு க்கு
வசந்தம் தொலைக் காட்சியும் தனது பாராட்டுக ளைத் தெரிவித்திருப் பதும் இங்கு குறிப்
பிடத்தக்கது.