லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட்ட போட்டியில்
இங்கிலாந்து அணிய 8 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி
தொடரை கைப்பற்றியது. இங்கிலாந்து தலைவர் குக் அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.
நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் மேற்கிந்திய தீவுகள் அணியை
துடுப்பெடுத்தாட செய்ய அழைத்தது. தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் அதிரடியாக
விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். 51 பந்தில் 53 ஓட்டங்கள்
எடுத்திருந்தபோது ஸ்வான் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார். இதில் 3
பவுண்டரி, 5 சிக்சர்கள் அடக்கம்.
நல்ல தொடக்கம் தந்தும், பின்னர் வந்த வீரர்களில் வெய்ன் பிராவோ (77), பொல்லார்ட்
(41) தவிர வேறு யாரும் சோபிக்கவில்லை. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 9
விக்கெட்டுகளை இழந்து 238 ஓட்டங்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய இங்கிலாந்து 45 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 239 ஓட்டங்கள் சேர்த்து 8
விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தொடக்க ஆட்டக்காரரும் தலைவருமான அலஸ்டயர்
குக் 112 ஓட்டங்கள் விளாசினார். தொடர்ந்து 6வது முறையாக இங்கிலாந்து தொடக்க
ஆட்டக்காரர் ஒருவர் சதம் அடித்துள்ளார். இந்த சாதனையை இதற்கு முன்பு எந்த அணியும்
செய்ததில்லை.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட தொடரை இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில்
கைப்பற்றியது. கடைசி ஆட்டம் நாளை நடக்கிறது.