இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறிய ஒன்பது இந்திய மீனவர் கைது
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறிய
ஒன்பது இந்திய மீனவர் கைது
ஸாதிக் ஷிஹான்
இலங்கை கடற் பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த ஒன்பது இந்திய மீனவர்களை இலங்கை
கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இந்த மீனவர்கள் பயன்படுத்திய மீன்பிடி படகு ஒன்றையும் காங் கேசன்துறை வடக்கு கடற்
பரப்பில் வைத்து கடற்படையினர் நேற்றுக் காலை கைப்பற்றியதாக கடற் படைப் பேச்சாளர்
கொமாண்டர் பிரசன்ன கோசல வர்ணகுலசூரிய தினகரனுக்குத் தெரிவித்தார்.
இலங்கை கடற் பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் கைது
செய்யப்பட்ட ஒன்பது இலங்கை மீனவர்களையும் மேலதிக விசாரணைக்காக காங்கேசன்துறை
பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக
மீன்பிடி மற்றும் நீர்வளங்கள் அமைச்சுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர்
சுட்டிக்காட்டினார்.