காரைதீவில் கருங்குளவி கொட்டியதில் 27வயது இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் காரைதீவு 10ம் குறிச்சியில் இடம்பெற்றுள்ளது. இது பற்றி மேலும் தெரிய
வருவதாவது,
குளவிகொட்டியதில் உயிரிழந்த இளைஞன் கடந்த இருவாரங்களுக்கு மன்னர் உறவினர் ஒருவரின்
வீட்டுக்குச் சென்றுவிட்டு திரும்பிய வழியில் ஒரு வீட்டின் முன் சிறிது நேரம்
இளைப்பாறியுள்ளார் அவ்வீட்டில் முன்பகுதியில் குளவிகள் கூடு இருந்துள்ளது.
இதனை அவதானித்த அப்பகுதியிலுள்ள சில சிறுவர்கள் அக்குளவிக் கூட்டிற்கு
கல்லெறிந்துள்ளனர். அதனை தொடர்ந்து பறந்து வந்த குளவிகள் அங்கு நின்றிருந்த குறித்த
இளைஞனை கொட்டியுள்ளது. இதனால் மயக்கமடைந்த இளைஞன் உறவினர்கள் மூலம் கல்முனை ஆதார
வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டார்.
மட்டக்களப்பு வைத்தியசாலையில் தொடர்ந்து 15 தினங்களாக சிகிச்சை பெற்று வந்த இவர்
நேற்று புதன்கிழமை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். காரைதீவு 10ம் பிரிவைச்
சேர்ந்த வடிவேல் கிருஷாந் என்பவரே (27) வயது உயிரிழந்தவராவார் இவர் உடல் நலம்
பாதிக்கப்பட்ட புத்தி சுவாதீனம் அற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.