ஹிஜ்ரி வருடம் 1433 ரஜப் மாதம் பிறை 30
நந்தன வருடம் ஆனி மாதம் 07ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY ,JUNE, 21, 2012
வரு. 80 இல. 146
 
அமைச்சுக்கள், திணைக்களங்களில் நாளை தீவிர டெங்கு ஒழிப்பு பணி

அமைச்சுக்கள், திணைக்களங்களில் நாளை தீவிர டெங்கு ஒழிப்பு பணி

முப்படைகள், பொலிஸ், வைத்திய நிபுணர்களும் பணியில் ஈடுபடுத்த முடிவு: பாதுகாப்பு செயலர் ஏற்பாடு

பாதுகாப்பு செயலா ளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஏற்பா ட்டில் அரசாங்க நிறு வனங்களில் நுளம்பு ஒழிப்பு பணிகள் நாளை 22ம் திகதி விரிவான அடிப் படையில் முன்னெடுக்கப்படவிருக்கின் றது.

இதன்படி, சகல அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், அதிகார சபைகள், ஆணைக்குழுக்கள் நியதிச் சபைகள் என்பவற்றின் அலு வலகங்களும் கட்டடங்களும் நுளம்பு பெருக்கம் தொடர்பான விசேட பரி சோதனைக்கு உட்படுத்தப்படவிருக்கின்றன.

முப்படையினரும், பொலிஸாரும், பொது சுகாதாரப் பரிசோதகர்கள், நுளம்பு குடம்பிகள் தொடர்பான நிபுணர்கள் ஆகியோர் அந்தந்த அரச நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இப்பணியில் ஈடுபடுவர் என்று சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

டெங்கு நுளம்பு ஒழிப்பு தொடர்பாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையிலேயே இவ்வேலைத் திட்டம் முன்னெடுக்கப் படுவதாகவும் அவர் கூறினார்.

கடந்த சில தினங்களாக அரச நிறுவ னங்களில் பலர் டெங்கு நோய்க்கு உள்ளா கினர். அதேநேரம், அரச நிறுவனங்களிலும், அவற்றை அண்டியுள்ள பிரதேசங்களில் டெங்கு நுளம்பு குடம்பிகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இவற்றை கருத்தில் கொண்டே இந்த நுளம்பு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரச நிறுவனங்களின் கூரைப் பலீகளும், அவற்றின் குளிரூட்டிகளும் அரச நிறுவனங்களில் டெங்கு நுளம்பு பெருக்கத்திற்குப் பெரிதும் உதவுவதாக ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி