ஹிஜ்ரி வருடம் 1433 ரஜப் மாதம் பிறை 30
நந்தன வருடம் ஆனி மாதம் 07ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY ,JUNE, 21, 2012
வரு. 80 இல. 146
 
மூன்று வருடத்துள் 349 திட்டங்கள் 48,422 தொழில் வாய்ப்புகள்

மூன்று வருடத்துள் 349 திட்டங்கள் 48,422 தொழில் வாய்ப்புகள்

முதலீட்டுச் சபை சட்டத்தின் கீழ் கடந்த 3 வருடத்தில் 349 திட்டங்கள் ஆரம் பிக்கப்பட்டதோடு இதனூடாக 48, 422 தொழில் வாய்ப்புகள் உருவாக்க எதிர் பார்க்கப்பட்டது என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

வாய்மூல விடைக்காக ரவி கருணா நாயக்க எம்.பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது,

முதலீட்டு சபை சட்டத்தின் கீழ் 2009ல் 135 தொழிற்சாலை களும் 2010ல் 148 தொழிற்சாலைகளும் 2011ல் 66 தொழிற்சாலைகளும் அமைக்கப்பட்டன. இதன் மூலம் 2009ல், 17,225 தொழில் வாய்ப்புகளும் 2010 ல் 19,944 தொழில் வாய்ப்புகளும் 2011ல் 11, 223 தொழில் வாய்ப்புகளும் எதிர்பார்க்கப்பட்டது.

புதிதாக உருவாக்கப்பட்ட முதலீட்டுச் சபை கம்பனிகள் மூலம் 2009ல் 92 மில்லியன் டொலர் பெறுமதியான ஏற்றுமதிகளும் 2010 ல் 41 மில்லியன் டொலர் பெறுமதியான ஏற்றுமதிகளும் 2011ல் 40 மில்லியன் ரூபா பெறுமதியான ஏற்றுமதிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்தியா, மலேசியா, தென் ஆபிரிக்கா, ஜெர்மனி, தென் கொரியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம், ஸ்பெயின், அமெரிக்கா, ஹொங்கொங், இத்தாலி, சீனா அடங்களான பல நாடுகள் முதலீடுகளை மேற்கொண்டுள்ளன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி