ஹிஜ்ரி வருடம் 1433 ரஜப் மாதம் பிறை 30
நந்தன வருடம் ஆனி மாதம் 07ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY ,JUNE, 21, 2012
வரு. 80 இல. 146
 
நுவரெலியா, புத்தளம் பகுதிகளில் திடீர் பலத்த காற்று; வீடுகள் சேதம்

நுவரெலியா, புத்தளம் பகுதிகளில் திடீர் பலத்த காற்று; வீடுகள் சேதம்

நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களின் சில பகுதிகளில் நேற்று திடீரென வீசிய பலத்த காற்றின் காரணமாக 15 வீடுகள் சேதமாகியுள்ளன.

புத்தளத்தில் வடக்கு கரையோரம் மற்றும் குருஸபாடு ஆகிய பகுதி களிலுள்ள 5 வீடுகளும் நுவரெலியா கந்தப்பளை பாக். தோட்டத்திலுள்ள 10 வீடுகளுமே கடுங்காற்றின் காரணமாக சேதமாகியுள்ளதென அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் கூறினார்.

இதேவேளை நுவரெலியா கந்தப்பளை பாக். தோட்ட தேலை மலை பிரிவில் நேற்று முன்தினம் (19.06.12) இரவு 8.10 மணியளவில் வீசிய கடும் காற்றினால் பத்து வீடுகளின் கூரைகள் முற்றாக சேதமடைந்துள்ளன.

நேற்று முன்தினம் (19.06.12) இரவு 8.10 மணியளவில் வீசிய கடும் காற்றினால் பத்து வீடுகளின் கூரைகள் முற்றாக பாதிக்கப்பட்டதன் காரணமாக இக் குடும்பங்களை சேர்ந்த 41 பேர் கந்தப் பளை பாக் தோட்டத்தில் அமைந்துள்ள பிரசவ இல்லத்தில் தங்க வைக்கப்பட் டுள்ளனர். இவர்களில் பாடசாலை செல்லும் ஐந்து பிள்ளைகளும் சிறுவர்கள் எட்டு பேரும் பெரியவர்கள் 28 பேரும் அடங்குகின்றனர்.

இவர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை நுவரெலியா அனர்த்த முகாமைத்துவத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அதன் முகாமையாளர் எரந்த ஏமவர்தன தெரிவித்தார்.

இதேவேளை, நுவரெலியா பிரதேச சபை தலைவர் சதாசிவம், நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் இராதாகிருஷ் ணன் ராஜாராம், பிரதேச சபை உறுப் பினர்களான ரவீந்திரன், அப்துல் அசீஸ், பத்மநாதன், நாணயக்கார ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களுக்கான உலர் உணவு பொருட்களை வழங்கி வைத்ததோடு நிர்வாகத்தினருடன் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

நிர்வாகத்தினர் எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் வீடுகளை புனரமைத்து தருவதாக தம்மிடம் தெரிவித்ததாக மாநகர சபை உறுப்பினர் இராதா கிருஷ்ணன் ராஜாராம் தெரிவித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி