ஹிஜ்ரி வருடம் 1433 ரஜப் மாதம் பிறை 30
நந்தன வருடம் ஆனி மாதம் 07ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY ,JUNE, 21, 2012
வரு. 80 இல. 146
 

அலைக்கற்றை பிரச்சினையில் நான் செய்த 4 தவறுகள்

அலைக்கற்றை பிரச்சினையில் நான் செய்த 4 தவறுகள்

அலைக்கற்றை பிரச்சினையில் நான் 4 தவறுகளைச் செய்துள்ளேன் என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா

2-ஜி வழக்கில் பிணையில் விடுவிக்கப் பட்ட ஆ. ராசா தனது சொந்த ஊரான பெரம்பலூருக்கு திங்கட்கிழமை வந்தார். செந்துறைப் பகுதியில் தொண்டர்களிடையே அவர் மேலும் பேசியதாவது; இந்தப் பகுதி சுயமரியாதை தீரர்கள் வாழ்ந்த பூமி.

உலகத்தில் எதைப் பெற விரும்பினாலும், மற்றொன்றை இழந்துதான் பெறமுடியும். இந்தியாவில் தற்போது சாதாரண மனி தன் கையிலும் அலைபேசி இருக்கிறது. அதற்காக நான் 15 மாதம் சிறையில் இருந் துள்ளேன். நான் செய்தது 4 தவறுகள், முதல் தவறு ஸ்பெக்ட்ரம் பிரச்சினை இவ் வளவுதான் என வெளிப்படையாகக் கூறியது.

2வது தவறு ஒரு ரூபாய் என்றிருந்த அலைபேசி கட்டணத்தை 30 பைசாவாகக் குறைத்தது. 3வது தவறு நான் பதவியேற்ற போது 100கோடி இந்திய மக்கள் தொகையில் 30 கோடி பேரே அலை பேசியை பயன்படுத்தினர்.

சிலரின் ஆதி க்கத்தில் இருந்த இந்தத் துறையை மீட்டு, பதவியை விட்டு இறங்கும்போது, 90 கோடி பேர் அலைபேசியை பயன்படுத் தினர். இதை நான் சொல்லவில்லை, நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியது. 4வது தவறு இந்தியக் குடிமகன் சராசரியாக மாதம் ரூ. 310 அலைபேசி கட்டணமாகச் செலுத்தி வந்ததை ரூ. 100 ஆகக் குறைத்தது என்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி