ஹிஜ்ரி வருடம் 1433 ரஜப் மாதம் பிறை 22
நந்தன வருடம் வைகாசி மாதம் 31ம் திகதி புதன்கிழமை
WEDNESDAY ,JUNE, 13, 2012
வரு. 80 இல. 139
 

நீச்சல் போட்டியில் விவேகானந்தா மாணவனுக்கு இரண்டு தங்கப்பதக்கங்கள்

நீச்சல் போட்டியில் விவேகானந்தா மாணவனுக்கு இரண்டு தங்கப்பதக்கங்கள்

கொழும்பு தேர்ஸ்டன் வித்தியால நீச்சல் தடாகத்தில் இம்மாதம் 8-10ம் திகதி வரை அகில இலங்கை பாடசாலைகளுக் கிடையில் நடைபெற்ற மஹிந்த ராஜபக்ஷ சம்பியன்ஷிப் 2012 நீச்சல் போட்டிகளில் கொழும்பு விவேகானந்தா கல்லூரியைச் சேர்ந்த மாணவன் ஜெய்சங்கர் ஹக்ஸன் இரண்டு தங்கப் பதக்கங்களை சுவீகரித்துள்ளார்.

8 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் பங்குபற்றிய ஜெய்சங்கர் ஹக்ஸன் தனது அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தி 25 மீற்றர் வண்ணத்துப்பூச்சி (பட்டர்ப்ளை), 25 மீற்றர் மார்தட்டு நீச்சல் (ப்றேஸ்ட் ஸ்ரோக்) ஆகிய இரண்டு போட்டிகளிலும் தங்கப் பதக்கங்களை சுவீகரித்து பாடசாலை வரலாற்றில் நீச்சல் போட்டிகளில் பிரகாசித்த முதலாவது மாணவர் என்ற கெளரவத்தை தன்வசப்படுத்திக்கொண்டார்.

25 மீற்றர் பட்டர்ப்ளை போட்டியை 22.44 செக்கன்களில் நிறைவு செய்து சனிக்கிழமை தனது முதலாவது தங்கப் பதக்கத்தை வென்றெடுத்த ஹக்ஸன், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 25 மீற்றர் ப்றேஸ்ட் ஸ்ரோக் போட்டியில் 26.23 செக்கன்களில் போட்டித் தூரத்தை நிறைவு செய்து கல்லூரிக்கு இரண்டாவது தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார்.

தேர்ஸ்டன் கல்லூரியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்போட்டிகளில் நாடு தழுவிய ரீதியிலிருந்த நிலையிலேயே அவர் தமது கல்லூரி சார்பாக திறமைகளை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி