ஹிஜ்ரி வருடம் 1433 ரஜப் மாதம் பிறை 22
நந்தன வருடம் வைகாசி மாதம் 31ம் திகதி புதன்கிழமை
WEDNESDAY ,JUNE, 13, 2012
வரு. 80 இல. 139
 
அவுஸ்திரேலியா புறப்படவிருந்த 11 பேர் புத்தளத்தில் கைது

அவுஸ்திரேலியா புறப்படவிருந்த 11 பேர் புத்தளத்தில் கைது

வள்ளங்கள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்காக அழைத்து வரப்பட்ட 11 பேரை புத்தளம் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

புத்தளம் ஆஸ்பத்திரிக்கு பின் புறமாகவுள்ள தங்கு விடுதியொன்றை நேற்றுக்காலை பொலிஸார் முற் றுகையிட்ட போதே 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பைச் சேர்ந்த 9 பேரும், முல்லைத்தீவு பகுதி யைச் சேர்ந்த இரண்டு பேருமே இவ்வாறு கைது செய் யப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரிடமிருந்தும் தலா இரண்டு இலட்சம் ரூபா வரையில் அறவிட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்தனர். இவர்களை அவுஸ்திரேலியா அனுப்பு வதாக கூறி பணம் பெற்றுக்கொண்ட நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விரைவில் இவர் கைது செய்யப்படுவார் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரி வித்தார். இது தொடர்பாக புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்றுக் காலை 11.30 மணியளவில் பொலிஸார் இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர். (ள)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி