பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளிடமிருந்து பணம் அறவிடும் திட்டம்
பெற்றோரை பராமரிக்காத
பிள்ளைகளிடமிருந்து
பணம் அறவிடும் திட்டம்
முறைப்பாடு செய்தால்
உடனடி நடவடிக்கை
எம். எஸ். பாஹிம்
தமது பெற் றோரை பராமரிக் காத பிள்ளைகளிடமிருந்து பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு
மாதாந்தம் ஒரு தொகை பணம் பெற்றுக்கொடுக்கும் திட்டமொன்றை சிரேஷ்ட பிரஜைகள் செயலகம்
ஆரம்பித்துள்ளதாக செயலக பணிப்பாளர் திருமதி ஜே. கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
தமது பிள்ளைகளால் உரிய முறையில் பராமரிக்கப்படாத பெற்றோர் கடிதம் மூலமோ தொலைபேசியிலோ
முறைப்பாடு செய்யும் பட்சத்தில் இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர்
கூறினார்.
ஆனால், பிள்ளைகள் தம்மை பராமரிக்காத போதும் அதிக மான பெற்றோர் இது
குறித்து முறைப்பாடு செய்யாதுள்ளதாகவும் குறைந்தளவானவர்களே இவ் வாறு
பராமரிப்புக்கோரி முறையிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார். பராமரிக்கப்படாத பெற்றோர்
குறித்து அவர்களின் உறவினர்களோ, அயலவர்களோ சிரேஷ்ட பிரஜைகள் செயலகத்திற்கு முறையிட
முடியும். முறைப்பாடுகள் செயலகத்தின் 150 ஏ, எல். எச். பி. கட்டிடம், நாவல, நுகேகொட
என்ற விலாசத்திற்கோ அல்லது 2824082 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அறிவிக்க முடியும்
எனவும் பணிப்பாளர் கூறினார்.
இந்த முறைப்பாடுகளை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின்
தலைமையில் பராமரிப்பு சபையொன்று நிறுவப்பட்டுள்ளது. கிடைக்கும் சகல முறைப்பாடுகளும்
ஆராயப்பட்ட பின்னர் இரு தரப்பினரும் அழைத்து பராமரிப்பு தொகை குறித்து
தீர்மானிக்கப்படும்.