வெட்கப்பட வேண்டிய நாடுகள் பட்டியலிலிருந்து இலங்கை நீக்கம்
வெட்கப்பட வேண்டிய நாடுகள்
பட்டியலிலிருந்து இலங்கை நீக்கம்
வெட்கப்பட வேண்டிய நாடுகள் பட்டியலிலிருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களை இராணுவத்தில் சேர்த்தல் மற்றும் அவர்களை பயன்படுத்துவதை முடிவுக்கு
கொண்டு வருவதற்காக ஐ. நா. பாதுகாப்புச் சபையால் முன்வைக்கப்பட்ட நிகழ்ச்சித்
திட்டத்தை இலங்கை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதென ஐக்கிய நாடுகளின் பிரதம
அதிகாரியின் சிறுவர் மற்றும் ஆயுத போராட்டம் பற்றிய வருடாந்த அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களை கொலை செய்தல், ஊனமாக்குதல், பாலியல் வன்முறையில் ஈடுபடுதல், பாடசாலைகள்,
வைத்தியசாலைகளை தாக்குதல் என்பவற்றில் ஈடுபடும் தரப்பினர் பட்டியல் இந்த அறிக்கையில்
சேர்க்கப்பட்டுள்ளது.
இதுவே வெட்கப்பட வேண்டியவர்கள் பட்டியல் ஆகும். இந்த
அறிக்கையில் மேலும் கூறப்பட் டுள்ளதாவது, இலங்கையில் பாதுகாப்பு நிலைமை ஸ்திரம்
அடைந்துள்ளது. அது விரைந்து மீட்சி பெற்று வருகிறது. இருப்பினும், வடக்கில்
வாழ்கின்ற இலகுவில் ஆபத்துக்கு உட்படும் நிலை யிலுள்ள குடும்பங்களுக்கான ஆதரவு
இன்னும் சவாலாகவே உள்ளது.
இதனுடன் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும்
அமுலாக்கும்போது யுத்தத்துக்கு பின்னரான முயற்சிகளுக்கு அது வலு சேர்ப்பதாக அமையும்.
ஒக்டோபர் 2009இன் பின் சிறுவர்களை ஆயுதக் குழுக்களில் இணைத்த சம்பவங்கள் பற்றி
அறியப்படவில்லை. இருப்பினும் புலிகளினால் படையில் சேர்க்கப்பட்ட 6905 பிள்ளைகளின்
1373 பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் உள்ளது.
இதுவரையில் 364 ஆண்கள், 230 பெண்கள் அடங்கலாக 12 – 18 வயதுக்கு உட்பட்ட 594
பிள்ளைகள் தமது புனர் வாழ்வு திட்டத்தை பூர்த்திசெய்து தமது குடும்பத்துடன்
சேர்ந்துள்ளனர்.
2009 இல் வவுனியா அரசாங்க அதிபரும் நன்னடத்தை மற்றும் சிறுவர் நலன் ஆணையாளரும்
இணைந்து தனித்துப்போன சிறுவர்களுக்கென குடும்பத்தை கண்டுபிடிக்கும் அலகொன்றை
யுனிசெப் ஆதரவுடன் நிறுவினர். இது வரை குடும்பத்தை அல்லது பிள்ளையை தேடிப் பிடித்து
தரும்படி 736 விண்ணப் பங்கள் கிடைத்திருந்தன.