நெல் கொள்வனவுச் சபை இம்முறை பெரும்போகத்தில் ஒரு இலட்சத்து 12 ஆயிரத்து 277
மெட்ரிக் தொன் நெல்லினை கொள்வனவு செய்துள்ளது. வரலாற்றிலேயே ஆகக் கூடிய நெல்
கொள்வனவு செய்யப் பட்டிருப்பது இதுவே முதற் தடவையாகுமென கூட்டுறவு மற்றும் உள்ளூர்
வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
இதற்கு முன்னர் 2010 பெரும்போகத்தின் போதே ஆகக்கூடிய தொகையாக ஒரு இலட்சத்து 11
ஆயிரத்து 789 மெட்ரிக்தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டிருந்தது.
அதற்குப் பின்னர்
இம்முறையே ஆகக் கூடிய தொகையாக ஒரு இலட்சத்து 12 ஆயிரத்து 277 மெட்ரிக்தொன் நெல்
கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இதற் காக அரசாங்கம் இதுவரையில் 3 ஆயி ரத்து 190
மில்லியன் ரூபாவினை ஒதுக்கி யிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
இவ்வருடத்திற்கான பெரும்போகத்தில் அனுராதபுரம் மாவட்டத்திலேயே ஆகக் கூடிய அளவு நெல்
கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இது 23 ஆயிரத்து 575 மெட்ரிக் தொன்னாகுமென அமைச்சர்
சுட்டிக்காட்டினார்.