அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நற்பணி தொடர வேண்டும்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்
நற்பணி தொடர வேண்டும்
பயங்கரவாத இயக்கமான எல்.ரீ.ரீ.ஈயினர் நடத்திக் கொண்டிருந்த தான்தோன்றித்தனமான 30
ஆண்டுகால யுத்தத்தின் போது வட பகுதி பிள்ளைகளின் கல்வியைச் சீர்குலைத்தும், அந்தப்
பிள் ளைகளின் எதிர்காலம் பற்றி நம்பிக்கையையும் கல்வி கற்று சமூகத் தில் பொறுப்பான
பதவியை வகிக்க வேண்டும் என்று அவர்கள் மன தில் தோன்றிய கனவுகளையும் நிறைவேறாமல்
செய்தனர்.
அன்று எங்கள் நாட்டின் இளம் சந்ததியினரை தங்கள் கைப்பொம்மைக ளாக வைத்து எல்.ரீ.ரீ.ஈ.
ஆட்டிப்படைத்து வந்த போதிலும் இன் றைய அரசாங்கம் வடபகுதி இளைஞர்களுக்கு
கல்வித்துறையில் சிற ந்த வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கின்றது என்று பாரம்பரிய கைத்
தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியி லும் சமீபத்தில் நடைபெற்ற மாணவ,
மாணவியருக்கு மஹாபொல உயர் கல்வி புலமைப்பரிசில் வழங்கும் வைபவத்தில் அமைச்சர் வட
மாகாணத்தில் இருந்து மாத்திரம் 1500க்கும் மேற்பட்ட மாணவர்க ளுக்கு இந்த புலமைப்
பரிசில் வழங்கப்படும் என்று கூறினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சிறந்த ஆளுமைத்திறன் மூலம் பயங்கரவாதம் சுமார்
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் முற் றாக ஒழிக்கப்பட்டது என்றும் அதன் மூலம் இன்று நம்
நாட்டு மக் கள் குறிப்பாக வடபகுதி மக்கள் எல்.ரீ.ரீ.ஈயின் அடிமைப்பிடியில் இரு ந்து
விடுவிக்கப்பட்டு இன்று சுதந்திரமாக அமைதியான வாழ்க் கையை நடத்திக்
கொண்டிருக்கிறார்கள் என்றும் அமைச்சர் தேவான ந்தா தெரிவித்தார்.
வடபகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மரு த்துவ பீடத்துக்குத்
தெரிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்தார். அரசாங்கத்திடம்
தாம் நடத்திய உயர் மட்ட முயற்சிகளின் பலாபலனாக யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் விவ
சாய பீடத்தை கிளிநொச்சியில் திறப்பதற்கும் வழி பிறந்திருக்கின்றது என்று தெரிவித்த
அமைச்சர் ஏற்கனவே இதற்கான முதற்கட்ட சேவைகள் ஆரம்பமாகி இருப்பதாகவும் கூறினார்.
தமது வேண்டுகோளுக்குச் செவிமடுத்த மாண்புமிகு ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ஷ அவர்கள்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பொறி யியல் பீடத்தை ஏற்படுத்துவதற்கு இப்போது
நடவடிக்கை எடுத்தி ருப்பதனால் வடபகுதி மக்களின் சார்பில் தாம் ஜனாதிபதி அவர்க ளுக்கு
நன்றியைத் தெரிவிப்பதாகவும் அமைச்சர் தேவானந்தா மேலும் அறிவித்தார்.
எங்கள் அரசாங்கம் வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்வதுடன் நின்றுவிடாமல் தமிழர்கள்
எதிர்நோக்கி இருக்கும் பிரச்சினைகளுக்கு எல்லாத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய
நியாயமான அரசியல் தீர்வொன்றையும் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதா கவும்
அமைச்சர் கூறினார்.
வடமாகாணத்தில் இருந்து குறிப்பாக மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் கிளிநொச்சி
மாவட்டங்களில் இருந்து 1500 மாணவர்கள் இந்த மஹாபொல புலமைப் பரிசிலை
பெற்றுக்கொண்டிருப்பதாகவும் அதன் மூலம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில்
முன்னிலையில் இருந்த வடபகுதியின் கல்வித்துறையில் மீண்டும் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டு
வடபகுதிப் பிள்ளைகள் பெருமளவில் எமது நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வைத்தியர்களாகவும்,
பொறி யியலாளர்களாகவும், கட்டடக் கலைஞர்களாகவும், பொருளாதார நிபு ணர்களாகவும்,
கணக்காளர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் உருவா குவதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும்
அமைச்சர் தேவா னந்தா மேலும் மகிழ்ச்சி தெரிவித்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒரு செயல் வீரர். அவர் தமிழ் மக்க ளின் மேம்பாட்டுக்காக
தனது உயிரையே பணயம் வைத்து பல்லா ண்டு காலமாக பணிபுரிந்து வருகின்றார். இந்த ஒரு
நல்ல தலைவர் நீண்டகாலம் மக்கள் பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக் கத்துடன் இறைவன்
எத்தனையோ சந்தர்ப்பங்களில் அவரது உயிரை காப்பாற்றி இருக்கின்றார்.
1983 ஆம் ஆண்டு
வெலிக்கடைச் சிறைச் சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட போதும்,
வேறுபல பயங்கரவாத தாக்குதல்களின் போதும் களுத் துறைச் சிறைச்சாலையில் தனிமனிதனாகச்
சென்று தமிழ்க் கைதிக ளின் குறைபாடுகளைக் கேட்டறிந்து கொண்டிருந்த போதும் இந்த நல்ல
மனிதர் தாக்கப்பட்டார். ஆயினும் அத்தகைய சந்தர்ப்பங்களி லும் இறை அருளினால் அவரது
உயிர் காப்பாற்றப்பட்டது.
தமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில்
அபிவிருத்தி அமைச்சின் ஊடாக திரு டக்ளஸ் தேவா னந்தா வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு
மட்டுமன்றி தென்னில ங்கை, மலையகம் உட்பட நாடெங்கிலும் உள்ள பாரம்பரிய கைத் தொழில்
முயற்சிகளுக்கும், சிறு கைத்தொழில் செயற்பாடுகளுக்கும் பூரண ஆதரவையும் நிதி
உதவியையும் ஒத்துழைப்பையும் வழங்கிக் கொண்டிருக்கின்றார்.
அமைச்சரிடம் இருக்கும் ஒரு நற்பண்பை நாம் இங்கு குறிப்பிடுவது அவசியமாகும். அவர்
தனது ஆதரவாளர்களுக்கு மட்டுமன்றி தன க்கு எதிரான அரசியல் சித்தாந்தத்தைக்
கடைப்பிடிப்பவர்களுக்குக் கூட அவர்கள் தன்னை நாடி ஏதாவது உதவி கோரினால் அந்த உதவியை
உடனடியாகச் செய்து கொடுக்கும் ஒரு நற்பண்பாளராக விளங்குகின்றார். அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தாவின் இந்த நற்பணி தொடர்ந்து நடக்க வேண்டும் என்று நாம் அவரைப் பாரா
ட்டுகின்றோம்.