ஹிஜ்ரி வருடம் 1433 ரஜப் மாதம் பிறை 22
நந்தன வருடம் வைகாசி மாதம் 31ம் திகதி புதன்கிழமை
WEDNESDAY ,JUNE, 13, 2012
வரு. 80 இல. 139
 

கண்டி மடுல்கலையிலுள்ள ஆஸ்பத்திரியில் வைத்தியர்கள் பற்றாக்குறை

கண்டி மடுல்கலையிலுள்ள ஆஸ்பத்திரியில் வைத்தியர்கள் பற்றாக்குறை

கண்டி மாவட்டத்திலுள்ள முக்கிய பெருந்தோட்டப் பகுதியான மடுல்கலையில் அமைந்துள்ள அரச வைத்தியசாலையில் வைத்தியர்களுக்கும் மற்றும் ஏனைய பணியாளர்களுக்கும் பற்றாக்குறை நிலவுகிறது.

இது பன்விலை, மடுல்கலை பிரதேசங்களில் மிக முக்கிய வைத்திய சாலையாகும். இதன் காரணமாக நோயாளர்கள் மட்டுமன்றி வைத்தியர்களும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

ஆகக் குறைந்தது இன்னும் நான்கு வைத்தியர்களும், எட்டு தாதிமாரும், சிற்றூழியர் உட்பட ஏனைய 12 ஊழியர்களுமாக மொத்தம் 24 பேருக்கு வெற்றிடம் காணப்ப டுகிறது. (ஐ)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி