ஹட்டன் மண்திட்டுக்களை வெட்ட வேண்டாமென நகர சபை முதல்வர் வேண்டுகோள்
ஹட்டன் மண்திட்டுக்களை வெட்ட வேண்டாமென
நகர சபை முதல்வர் வேண்டுகோள்
(மஸ்கெலிய குறூப் நிருபர்)
மத்திய மலைநாட்டின் ஹட்டன் நகரை அண்டிய பகுதிகளில் மண் திட்டுகளை வெட்ட வேண்டாமென
அட்டன் டிக்கோயா நகர சபை முதல்வர் வைத்திய கலாநிதி அழகமுத்து நந்தகுமார் அப்பகுதி
மக்களிடம் கேட்டு கொண்டுள்ளார்.
கடந்த இரண்டு தினங்களாக இப்பகுதியில் மாலை
நேரங்களில் மழை பெய்து வருவதால் இவ்வாறான மண் திட்டுகள் வெட்டப்பட்ட பகுதியில்
உள்ளோரை மிகவும் அவதானமாக இருக்குமாறும் பணித்துள்ளார்.
மண் திட்டுகள் வெட்டப்பட்டு
அதனால் ஏற்படும் பாரிய விளைவுகளை மண் திட்டுகள் வெட்டியவர்கள் பொறுப்பு ஏற்க
வேண்டும் என நகர சபை முதல்வர் பணித்துள்ளார். (ஐ - ஞ)