வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான பெட்மின்டன் சம்பியன்சிப் தொடர்
கொழும்பில்
கிலிட்ஸ் அனுசரணையில்
வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான
பெட்மின்டன் சம்பியன்சிப் தொடர் கொழும்பில்
(பரீத் ஏ.ரகுமான்)
கிலிட்ஸ் அனுசரணையில் மேர்க்கன்டை யில் பெட்மின்டன் சங்கம் 2 வது தடவையாக நடத்தும்
பெட்மின்டன் சம்பியன்சிப் போட்டி 2012. 13ம் திகதி முதல் 17ம் திகதி வரை கல்கிஸ்ஸை
சாந்த தோமஸ் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.
இந்த பெட்மின்டன் சம்பியன் சிப் போட்டியில்
5 போட்டிகள் கொண்டதாக இடம்பெறும். ஆண்கள் இரட்டையர், கலப்பு, பெண்கள் இரட்டையர்,
ஆண்கள் தனிப்பிரிவாக இடம்பெறும்.
ஒரு அணியில் இருந்து 14 பேர் பங்கு பற்றலாம். இதில் 9 ஆண்களும், 5 பெண்களும்
அடங்குவர்.
இப்போட்டிகள் அனைத்தும் நொக் அவுட் அடிப்படையில் இடம்பெறும். கிராண்ட்ஸலாம், பிளேட்,
போல் அடிப்படையில் இடம்பெறும். இதேவேளை இப்போட்டியில் 36 அணிகள் பங்கு பற்றுவதோடு
400 வீரர்கள் பங்கு பற்றுகின்றனர். அத்துடன் 31 வர்த்தக நிறுவனங்களில் இருந்து இந்த
அணிகள் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இம்முறை இடம்பெறும் போட்டிக்கு முலாவது
தடவையாக கிலிட்ஸ் Glitz நிறுவனம் அனுசரணை வழங்குவது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் 3 புதிய நிறுவனங்கள் இம்முறை பங்கு பற்றுகின்றன.
இதேவேளை இறுதிப் போட்டிக்கு பிரதம அதிதியாக கிலிட்ஸ் Glitz நிறுவனத்தின் பொது
முகாமையாளர் ஹஸன் அம்ஜாட் மற்றும் கெளரவ அதிதியாக செயற்பாட்டு முகாமையாளர் ஏ.எம்.எம்.
ஷபீக் ஆகியோர் கலந்து கொள்வர்.
இதேவேளை இந்த பெட்மின்டன் சுற்றுப் போட்டி தொடர்பாக
இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த கிலிட்ஸ் Glitz நிறுவனத் தின்
பொது முகாமையாளர் ஹஸன் அம்ஜாட், இவ்வகையான வர்த்தக நிறுவனங்கள் பங்கு கொள்ளும்
பெட்மின்டன் சுற்றுத் தொடருக்கு முதல் தடவையாக அனுசரணை வழங்குவதையிட்டு எமது
நிறுவனம் பெருமைப்படுகிறது என்றும், எங்களது நிறுவனம் இவ்வகையான போட்டிகளுக்கு
அனுசரணை வழங்குவதன் மூலம் நவீன ஆடை உலகின் நீங்காத இடத்தைப் பிடிக்கும் என்பதில்
எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.
பெட்மின்டன் சுற்றுத் தொடருக்கு முதல் தடவையாக அனுசரணை வழங்கி எங்களால் விளையாட்டுத்
துறைக்கு புதிய அத்தியாயத்தை வழங்க முடியும் என்றும் தெரிவித்தார்.
பெட்மின்டன் போட்டிக்கு அனுசரணை வழங்கி இந்நாட்டின் விளையாட்டுத் துறைக்கும்
எங்களால் முடிந்த பங்களிப்பு செய்து தேசிய மட்டத்தில் வீர, வீராங்கனைகளை உருவாக்கும்
என்றால் அது எமது நிறுவனத்திற்கு கிடைத்த பெருமை என்றார்.
அத்துடன் எமது கிலிட்ஸ்
காட்சியறைகளில் விளையாட்டு வீர, வீராங்கனைகள் பயன்படுத்தத்தக்க சர்வதேச ரீதியான
ஆடைகளையும் எமது நிறுவனத்தில் பெற்றுக் கொள்ள முடியும். எதிர்வரும் காலங்களில்
நோலிமிட் காட்சியறைகளையும் நவீன மயப்படுத்த எண்ணியுள்ளோம் என்றும் தெரிவித்தார்.