உலகளாவிய ரீதியில் இன்று சம்பவிக்கும் தடுக்கக்கூடிய மரணங்களுக்கு முக்கியமான ஒரே
காரணியாகத் திகழ்வது புகைத்தலாகும். உலக சுகாதார அறிக்கைகளின்படி புகைத்தல்
உலகளாவிய ரீதியில் பத்துப் பேரில் ஒருவரின் உயிரைப் பறிக்கிறது என்றும் இருபதாம்
நூற்றாண்டில் நூறு (100) மில்லியன் பேர் புகையிலை பாவனையால் உயிரிழந்தனர் என்றும்
இருபத்தோராம் நூற்றாண்டில் இத்தொகை பத்து மடங்காக (1000 மில்லியன்) உயரும் என்றும்
அறியக்கிடைக்கிறது.
தற்போது உலகளாவிய ரீதியில் 100 மில்லியன் பேர் புகை பிடிக்கின்றனர். வயது
வந்தவர்களில் மூன்றில் ஒருவர் புகைத்தலுக்கு அடிமையாகியுள்ளார். 250 மில்லியன்
பெண்கள் தினமும் புகைபிடிக்கின்றனர்.
இவர்களில் 22 சதவீதமானோர் வளர்ச்சியடைந்த
நாடுகளையும், 9 சதவீதமானோர் வளர்ச்சியடையும் நாடுகளைச் சேர்ந்தவர்களாகும்.
சமீபகாலமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் புகைப் பிடிப்போர் எண்ணிக்கை கனிசமான அளவு
குறைந்து காணப்படுகிறது. அங்கு 35 சதவீதமானோரும், வளர்ச்சியடையும் நாடுகளில் 50
சதவீதமானோரும் தற்போது புகைப்பிடிக்கின்றனர்.
தினமும் 2010.12 மில்லியன் சிகரட்
புகைக்கப்படுகிறது. உலகளாவிய ரீதியில் 200 பில்லியன் அமெரிக்கன் டொலர் பெறுமதியான
சிகரட் வருடமொன்றுக்கு விற்ப னையாகிறது. இதில் மூன்றில் ஒரு பங்கு ஆசியா
கண்டத்திலும் ஆபிரிக்கா கண்டத்திலும் விற்பனையாகிறது. பத்து மில்லியன் ஏக்கர்
நிலத்தில் புகையிலை பயிரிடப்படுகிறது.
மரணத்தை ஏற்படுத்தும் காரணிகள் எட்டில் ஆறைப் புகையிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக
உலக ளாவிய ரீதியில் ஆண்டு தோறும் ஆறு (06) மில்லியன் பேர் புகை த்தல் காரணமாக
மரணமடைகிறார்கள். 2020 ஆம் ஆண்டில் இத்தொகை இரு மடங்காக (11 மில் லியன்)
அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட் டுள்ளது. இக்கால கட்டத்தில் மரணத்தை ஏற்படுத்தும்
முதன்மைக் காரணியாகப் புகைத்தல் இருக்குமென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும்
புகைப்பிடிப்போரில் அரைவாசிப் பேர் மரணமடைவர் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தற்போது நாளொன்றுக்கு 750 க்கு மேற் பட்டோரும், ஒரு நிமிடத்திற்கு ஆறுக்கு
மேற்பட்டோரும் புகைத்தல் காரணமாக மரணமடைகின்றனர். ஒருவர் ஒவ்வொரு சிகரட்டை
புகைக்கும் போது அவரின் வாழ்நாள் ஐந்து நிமிடங்களால் குறைவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இலங்கையில் தினமும் அறுபது பேரும் வருடாந்தம் 27,000 பேரும் புகைத்தல் காரணமாக
மரணமடைகின்றனர். புகைத்தல் மூலம் ஏற்படும் மரணங்கள் தற்கொலைக்குச் சமனாகும்.
புகைத்தல் இரண்டு வகைப்படும். நேரடியாகப் புகைத்தல் ஒன்று. மற்றது இரண்டாம் பாவனை
புகைத்தல் (Second hand Smokingl Passiue Smoking) ஆகும். நமது நாட்டில்
நாற்பது வயதிற்குக் கீழ்ப்பட்ட இளைஞர்களின் மரண ங்களுக்கு முதன்மைக் காரணியாக
விளங்குவது புகைத்தலாகும்.
இதனால் இளம் இல்லத்தரசிகளும், சிறார்களும்
குடும்பத்தலைவனை இழந்து பெரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். மேலை நாடுகளில் நடப்பது
போன்று புகைத்தல் மூலம் இறந்தவர்களின் விதவைகள் புகையிலைக் கம்ப னிகளுக்கு எதிராக
வழக்குத் தொடர்ந்து தகுந்த நஷ்டஈட்டைப் பெற முன்வர வேண்டும். சிகரட் புகைப்போர் நோய்
காரணமாகச் செயல் திறன் குன்றிக் காணப்படுவதால் நாட்டின் பொருளாதாரத்திலும் பாரிய
தாக்கம் ஏற்படுகிறது.
புகைப்பிடிப்போரில் இருபது (20) சதவீதமானோரே பாதிப்பு அடையும்
போது புகைப் பிடிக்காதோரில் எண்பது (80) சதவீதமானோர் புகைத்தலுக்குப் பெரும் பணம்
விரயமாகும் போது புகைத்தல் காரணமாகச் சம்பவிக்கும் பல்வேறு நோய்களுக்குச் சிகிச்சை
அளிக்க ஆண்டுதோறும் 150 பில்லியன் அமெரிக்கன் டொலர் செலவிடப்படுகிறது.
புகைக்கும் போது 6000க்கு மேற்பட்ட இரசாயன பதார்த்தங்கள் உடலினுள் செல்கின்றன.
இவற்றில் 450 க்கு மேற்பட்டவை நச்சுத்தன்மை கொண்டவை. 30 க்கு மேற்பட்டவை மிகுந்த
நச்சுத்தன்மை வாய்ந்தவை யாகும். இவற்றில் 60 க்கு மேற்பட்டவை பாரதூரமான நோய்களை
வரவழைக்கும் சக்தி வாய்ந்தவை களாகும்.
அமோனியம், ஆசனிக் சயனைட் டி.டி.ரி. மெத்தனோல்,
காபன் மொனெக்சைட், பென்சின், தார், நிக்கொடின் போன்றவை மிகவும் பயங்கரமானவை.
புகையிலுள்ள தார் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அழித்து விடுவதால்தான்
பெரும்பாலான நோய்கள் ஏற் படுகின்றன. இவை மனிதரை உடனடியாகப் பாதிக்காமல் சிறிது
சிறிதாக மனிதரின் உயிரைப் பறிக்கும்.
புகைத்தல் காரணமாக வாய், வயிறு, குடல், சுவாசப்பை, கனையம், மூத்திரப்பை போன்ற
உறுப்புக்களில் புற்று நோய் ஏற்படும். சுவாசக் கோளாறுகள், ஆஸ்துமா, சயரோகம்,
குடற்புன் இருதய நோய், கல்லீரல் அழற்சி சிரோசிஸ் (Cirrohsis) போன்ற நோய்களும்,
தற்கொலை மூலம் மரணமும் ஏற்படும்.
புகைத்தல் இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதால்
இதயத்துடிப்பு அதிகரிக்கும். மாரடைப்பை ஏற்படுத்தும் கெட்ட கொலொஸ்ரோலின் (LDL)
அளவை அதிகரித்து மாரடைப்பு ஏற்படாது தடுக்கும் நல்ல கொலொஸ்ரோலின் (HDL) அளவை
குறைத்து மாரடை ப்பை ஏற்படுத்தும் எனவே, புகைப்போரிடையே மாரடைப்பை ஏற்படுத்தும்
அபாயம் பத்து மடங்கு அதிகமாக இருக்கிறது. நீரிழிவு நோயை ஏற்படுத்தும் அபாயம்
இருமடங்காகும். குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரைகளை எடுக்கும் புகைப்பிடிக்கும்
பெண்களுக்கு மாரடைப்பு, பாரிசவாதம் ஏற்படும் அபாயம் இரட்டிப்பாகும்.
புகைத்தல் ஆண்களின் பாலு றுப்புகளுக்கு போதிய இரத்தம் செல்வதைத் தடை செய்வதால்
ஆண்மைக் குறைபாடு, மலடு போன்ற பாலியற் பிரச்சினைகள் ஏற்படும். மேலும், புகைப்பிடிப்
போருக்குப் பிறக்கும் குழந்தைகள் பல்வேறு பாதிப்புக்கு ஆளாவார்கள். கல்வியில் மந்தம்,
நோய்கள் போன் றவை ஏற்படும்.
இளம் வயதிலேயே முகத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தும்.
பற்களில் காவி பிடித்து, உதடுகள் கறுத்து, நகங்களில் கறைபிடித்து உடற்கவர்ச்சியைக்
கெடுத்து விடும். மேலும் முதுமையடையும் போது கண்பார்வை குன்றி விடும். ஆயுட் காலம்
எட்டு முதல் பத்து வருடங் களால் குறையும். இவர்களின் குழந்தைகளும் பிற்காலத்தில்
புகைப்பிடிப்பவர்களாக மாறு வர்.
ஒருவர் புகைப்பிடிக்கும் போது 25 சதவீத புகை மட்டுமே உட்செல்கிறது. உட்சென்ற
புகையில் 10 சதவீதம் மீண்டும் வெளி வருவதால் 85 சதவீத புகை வெளியே பரந்து சூழலை
மாசுபடுத்துகிறது. இதனால் புகைப்பிடிக்காத அப்பாவிகளான குழந்தைகளும் இல்லதரிசிகளும்
இரண்டாம் பாவனை புகைத்தலை (Second hand Smoking / Passive Smoking)
மேற்கொண்டு மிகவும் பாதிப்படைக்கின்றனர். பல்வேறு நோய்களும், குறைபாடுகளும், மரணமும்
ஏற்படுகின்றது.
ஆஸ்துமா, நியுமோனியா இருதய நோய், காசநோய், காதுகளில் தொற்று, சுவாசத்
தொகுதியில் தொற்று, திடீர் சிசு மரணம் போன்றவை ஏற்படும். குழந்தைகளுக்குக் கண்
பார்வை குறைபாடு ஏற்பட்டு முக்குக் கண்ணாடி அணிய வேண்டி வரும். 85 சதவீத மூக்குக்
கண்ணாடி அணியும் குழந்தைகளின் பெற்றோர் புகைப்பிடிப்பவர்களாகும் எனக்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் கர்ப்பணிகளுக்கு குறை மாத சிசு மற்றும் இறந்த சிசு,
அங்கக் குறைபாடுகளுடைய சிசு பிரசவமாகும். உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கைகளின் படி
700 மில்லியன் சிறார்கள் அதாவது மொத்த சனத் தொகையில் அரைவாசிப் பேர் வீட்டில்
புகைத்தல் மூலம் மாசுபட்ட காற்றைத் தினமும் சுவாசிக்கின்றனர் என அறியக் கிடக்கிறது.
இதனால் சுத்தமான காற்றைச் சுவாசிக்கும் மனித உரிமை மறுக்கப்படுகிறது. நிகொட்டின்
(Nicotine)
என்ற நச்சுப் பதார்த்தம் இதயத்துடிப்பை அதிகரித்து, இரத்த அழுத்தத்தை அதிகரித்து,
இரத்தத்தை உறையச் செய்து, இரத்தத்தில் பிராண வாயுவின் அளவைக் குறைத்து இருதய
வியாதிகளை ஏற்படுத்துகிறது.
இதனால் அப்பாவி இளம் மனைவி இருதய நோயால் இறக்க
நேரிடுகிறது. எனவே, இரண்டாம் பாவனை புகைத்தல் பொதுச் சுகாதாரத்திற்குப் பெரும்
சவாலாக இருக்கிறது.
வீட்டில் வேலைத்தளங்களில் பொது இடங்களில் புகைத்தல் மூலம் மாசுபடாத சுற்றாடலை
ஏற்படுத்தினால் நிகழ்கால மற்றும் எதிர்காலப் பரம்பரையை ஆரோக்கிய சமுதாய, பொருளாதார
பாதிப்புக்களிலிருந்து பாதுகாக்க முடியும். இதன் காரணமாகத்தான் வைகாசி 31ம் திகதியை
சர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினமாக உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனப்படுத்தியுள்ளது.
1987 ஆம் ஆண்டு முதல் இத்தினம் ஆண்டுதோறும் அனுஷ்டிக்கப்படுகிறது. 2007 ஆம் ஆண்டு
தொனிப்பொருள் "நூறு சதவீதமான புகைப்பிடிப்பற்ற சுற்றாடலை உருவாக்குவதும், அதனை
அனுபவிப்பதும்"
புகைப்பிடிப்போர் தங்களின் சுய கட்டுப்பாட்டை இழந்ததின் காரணமாகவே இப்பழக்கத்திற்கு
அடிமையாகியுள்ளனர். புகையிலையில் உள்ள நிகொட்டின் (Nicotine) என்ற இரசாயனப்
பதார்த்தமே புகை பாவனைக்கு அடிமையாக்கிறது. 1559 ஆம் ஆண்டு மேற்படி இரசாயனப்
பதார்த்தத்தை ஜூன் நிகொட் என்பவர் ஒரு மருத்துவப் பொருளாக அறிமுகப்படுத்தினார். இதன்
காரணமாகவே அவரின் பெயர் இப்பொருளுக்குச் சூட்டப்பட்டது.
நிகொட்டின் மூளையை அடைந்து உருவாகும் சந்தோசமான உணர்வே புகைப்போரை மீண்டும், அதைப்
பாவிக்கத் தூண்டுகிறது. மேலும் மூளை நரம்புகள் பாதிக்கப்படுவதால் இப்பாவனை
பழக்கத்திற்கு வந்து விடுகிறது. நிகொட்டினால் நன்மையும் உண்டு. இது பசியைக்
கட்டுப்ப டுத்துவதால் அளவுக்கு மீறி உண்பதால் உடற் பருமன் அதிகரித்தலைத் தடுக்கும்.
இந்த வருடத் தொனிப் பொருள் "புகையிலை கம்பனிகளின் தலையீடுகளுக்கு எதிரான பிரசாரம்"
என்பதாகும்.
இலங்கையில் உலக சுகாதார ஸ்தாபனம், உலக வங்கி, மெல்மதுர (Mel Madura)போன்ற
அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து புகைத்தலினால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க
ஆக்கபூர்வமான நடவடிக்கைகளைப் பெரும் பாடு பட்டு எடுத்த போதும் எதிர்பார்த்த பலன்
கிடைக்காதது கவலைக்குரிய விடயமாகும். இதனால் ஒவ்வொரு வருடமும் புகைத்தலுக்கு எதிராக
நடாத்தப்படும் வேலைத்திட்டங்களுக்குச் செலவிடப்படும் பெரும் தொகைப் பணம்
வீண்விரயமாகும்.
மனோவியல் சிகிச்சை மூலம் புகைபாவனைக்கு அடிமையானோரை மீட்பதும் கடினமாக உள்ளது. இந்த
முறை மூலம் பத்துப் பேரில் ஒருவர்தான் புகைத்தலை விட்டு விடுகிறார் என
அறியக்கிடைக்கிறது.
யோகா புகைத்தலை புதிதாக ஆரம்பிப்பதைத் தடை செய்து, ஏற்கனவே அப்பழக்கத்திற்கு
அடிமையாகியிருந்தால் அப்பழக்கத்தை விட்டு விடத் தூண்டுவதுமல்லாது புகைத்தல் காரணமாக
ஏற்பட்ட பல்வேறு நோய்களைக் கூட இல குவில் குணப்படுத்தும் சக்தி வாய் ந்தது.
யோகா உடலையும், உள்ளத்தையும், ஆன்மாவையும் ஒன்றிணைந்து உடல், உள, ஆன்மீக, சமுதாய
ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதனால் மனோவலிமை அதிகரிக்கிறது. நேர்மறை எண்ண சிந்தனையை
அதிகரித்து மனதில் தெளிவை ஏற்படுத்தும்.
இவை மனம் போன போக்கில் போவதைத் தடுத்து
நிறுத்தி மனதில் கெட்ட எண்ணங்களும், தவறான ஆசைகளும் ஏற்படாதவாறு தடுக் கும். சுய
கட்டுப்பாடு, ஆன்மீக, ஜீவகாருணிய உணர்வுகளை மேம்படுத்திப் புகைத்தலுக்கு
அடிமையாவதைத் தடுக்கும். ஏற்கனவே அடிமையானோர்களைக் கூட அதிலிருந்து விடுதலை பெறத்
தூண்டும் மனப்பக்குவத்தை இயல் பாகவே ஏற்படுத்தும்.
யோகா உடலின் அனுசேப அளவைக் (Metabolic rate) குறைத்து உடல் உள உறுப்புக்கள் மேல்
திணிக்கப்படும் அதிக பளுவைக் குறைக்கும். இதனால் மன உளைச்சல், பதட்டம், பரபரப்பு
போன்றவை அகலும். தசைகள் அமைதியுறும். நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்தி சீராகச்
செயற்படத் தூண்டுவதால் மனதில் அமைதி ஏற்படும்.
மன உளைச்சலை ஏற்படுத்தும் லக்டேற் (Lactate)
என்ற இரசாயனப் பொருளை இரத்தத்தில் குறைத்து மன உளைச்சல் ஏற்படுவதை தடுக்கும். மன
அமைதியை ஏற்படுத்தும் எண்டோபின் (Endoxphin) என்ற சுரப்பை அதிகரிப்பதின் மூலம் மன
உளைச்சல் மேலும் நீங்குகிறது. மன இறுக்கத்தை ஏற்படுத்தும் பிளாஸ்மா கோட்டிசோலின்
Plasma Cortiol) அளவைக் குறைத்து மனதில் அமைதியை ஏற்படுத்தும். மூளை வேலைபதி
மனதில் அமைதியை ஏற்படுத்தும்.
மூளைவேலைபதி மின் கருவியால் (Electro - Encephalogxam - EEG) அளவீடு செய்யப்படும் மன அமைதியை ஏற்படுத்தும் மூளையில்
உருவாகும். அல்பா அலைகளை (Alpha Waves) அதிகரிப்பதன் மூலம் மன அமைதியை
ஏற்படுத்தும் அதேநேரம் உடலையும் அமைதிப்படுத்தும். இவை அனைத்தும் புகைத்தல்
பழக்கத்திலிருந்து விடுதலை பெறத் தூண்டும். பாடசாலைகளில் யோகாவை ஒரு பாடமாகக்
கற்பித்தல் பிற்காலத்தில் புகை பாவனையற்ற சமூகம் உருவாக உதவும்.
எனவே, குறைந்த முயற்சியில் நிறைந்த பலனைக் கொடுக்கும் சக்தி வாய்ந்த நம் முன்னோர்கள்
நமக்காக விட்டுச் சென்ற யோகாவைப் புகைப்போர் மட்டுமன்றி ஏனையோரும் கிரமமாக
மேற்கொண்டால் புகைத்தல் பழக்கத்திலிருந்து விடுதலை பெற்று ஆரோக்கியத்துடன் நீண்ட
நாள்வளமாக வாழலாம்.