ஹிஜ்ரி வருடம் 1433 ரஜப் பிறை 10
நந்தன வருடம் வைகாசி மாதம் 19ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY ,JUNE, 01, 2012
வரு. 80 இல. 129

அமைச்சர் சண்முகம் யாழ். குடா விஜயம்;
நல்லூரில் வழிபாடு; நூலகத்தில் வரவேற்பு

வட மாகாண கல்வி மேம்பாட்டுக்கு சிங்கப்பூர் உதவி

மிகக் குறுகிய காலத்தில் குடாநாட்டில் பாரிய அபிவிருத்தி:
அரசுக்கு சண்முகம் பாராட்டு

வட மாகாணத்தின் கல்வி, தகவல் தொழில் நுட்பத்துறை மேம்பாட்டிற்கும் ஆசிரியர் பயிற்சி திட்டங்களுக்கும் சிங்கப்பூர் அரசாங்கம் பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமென யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் நீதி அமைச்சர் கே. சண்முகம் தெரிவித்துள்ளார்.யுத்தத்திற்கு பின்னர் வடக்கில் மூன்று வருட குறுகிய காலப் பகுதிக்குள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான அரசாங்கம் பாரிய அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்துள்ளமையை காணக்கூடியதாக உள்ளதுடன் அவற்றை பாராட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விவரம் »

உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாக மூடப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் நெல் ஆலைகள் என்பவற்றை மீளத்திறந்து அவற்றை மேம்படுத்துவதற்கு உரிய கடனை பதிவளிக்கும் மற்றும் புதிய கடன்களை வழங்குவதற்குமான கைத்தொழில் மறுமலர்ச்சி நிதியம் ஒன்றை அமைப்பேன்.

- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

58 நாடுகள்; 2500 பெளத்த
பிரதிநிதிகள் பங்கேற்பு

தாய்லாந்து சம்புத்த ஜயந்தி விழாவின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த

கெளதம புத்தர் ஞானோதயம் பெற்று 2600 வருடங்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு தாய்லாந்து அரசாங்கத்தின் பூரண அனுசரணையுடன் நடைபெறுகின்ற சம்புத்த ஜயந்தி விழாவின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கலந்து கொண்டார்.2600 வது சம்புத்த ஜயந்தியை மிகக் கோலாகலமாக நடத்துவதற்கு தாய்லாந்து இராச்சியத்தின் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த அரசாங்கத்தின் பூரண அனுசரணையுடன் நடைபெறுகின்ற சம்புத்த . . . . .

விவரம் »

மிஹிந்தலை லேக்ஹவுஸ் ஆலோக்க பூஜை

வருடாந்தம் மலரும் பொசன் போயாவை முன்னிட்டு லேக் ஹவுஸ் நிறுவனம் மிஹிந்தலையில் வருடாந்தம் ஆலோக்க பூஜை ஒன்றை மின்னொளி பூஜை நடத்தி வருவது குறிப்பிடத் தக்கது. இந்த வருடமும் இந்த ஆலோக்க பூஜையை லேக்ஹவுஸ் நிறுவனம் நடத்தவுள்ளது. இவ்வருடம் இது 50 வது தடவையாக நடத்தப்படவுள்ளது.

விவரம் »

40 மில். டொலர் செலவில் தாதியர் பயிற்சிக் கல்லூரி

அமெ., ஐரோ, மத்திய கிழக்கு தாதியர் வெற்றிடங்களுக்கு இலங்கையர்

மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நிலவும் தாதியர் வெற்றிடங்களுக்கு இலங்கையிலிருந்து தாதியர்களை அனுப்பும் பொருட்டு அவர்களுக்குத் தேவையான நவீன பயிற்சியினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் தாதியர் பயிற்சிக் கல்லூரி ஒன்றினையும் மருத்துவமனை ஒன்றினையும் நிர்மாணிப்பதற்காக சவூதி அரேபிய நிறுவனம் ஒன்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

விவரம் »


தாய்லாந்து விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அந்நாட்டு இளவரசியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். (படம்: சுதத் சில்வா)