சப்ரகமுவ மாகாணத்தில் ஐந்து வீதிகளின் அபிவிருத்திக்கு 2000 மில்லியன் ரூபா நிதி
சப்ரகமுவ மாகாணத்தில் ஐந்து வீதிகளின் அபிவிருத்திக்கு 2000 மில்லியன் ரூபா
நிதி
சப்ரகமுவ மாகாணத்தில் ஐந்து வீதிகளின்
அபிவிருத்திக்கு 2000 மில்லியன் ரூபா நிதி
(பலாங்கொடை தினகரன் நிருபர்)
சப்ரகமுவ மாகாணத்தில் ஐந்து பாதைகளை அபிவிருத்தி செய்வதற்காக ஜப்பான் நாட்டின்
ஏஜென்ஸி ஒன்றின் மூலம் 2000 மில்லியன் ரூபா சப்ரகமுவ மாகாண சபைக்கு கிடைத்துள்ளதாக
சப்ரகமுவ மாகாண பாதை அபிவிருத்தி, கிராமிய அடிப்படை வசதிகள் மற்றும் உல்லாசத் துறை
அமைச்சர் அதுல குமார ராகுபத்த தெரிவித்தார்.
கேகாலை மாவட்டத்தில் நான்கு பாதைகள்
அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன், இரத்தினபுரி மாவட்டத்தில் பல்லேபத்த
பகுதியிலிருந்து புளுதொட்ட வரையுள்ள பாதை இந்த நிதியின் மூலம் அபிவிருத்தி
செய்யப்பட வுள்ளது.
அதேசமயம் எதிர்காலத்தில் பஸ் போக்குவரத்து நடைபெறும் பாதைகளும்
புனரமைக்கப்பட வுள்ளதாக அமைச்சர் அதுல குமார ராகுபத்த தெரிவித்தார். (ஐ - ஞ)