![]()
|
||
~ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய மணல் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதையடுத்து கட்டட நிர்மாண பணிகள் துரிதம”;'
மணல் அகழ்தல், அதனை இடம்துக்கிடம் எடுத்துச் செல்லல் போன்ற நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய தளர்த்தப்பட்டுள்ளதை அடுத்து கட்டட அபிவிருத்திப் பணிகளில் துரித முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கட்டுப்பாடுகள் காரணமாக தாமதங்களை எதிர்கொண்டிருந்த அரச துறைக்கட்டட அமைப்புகள் முன்னேற்றம் கண்டு வருகின்றன. இவ்வாறு கண்டி மாவட்ட செயலாளர் காமினி செனவிரத்ன, மாதாந்த மாவட்ட அபிவிருத்தி சபைக் கூட்டத்தில் கூறினார். தொடர்ந்தும் தனதுரையில் அவர் கூறியதாவது:- ஒரு நாட்டின் அபிவிருத்தி வாயிலே கட்டடங்களின் முக்கியத்துவ இன்றியமையாதது. கட்டட அமைப்பப் பணிகள் சீராக மேற்கொள்ளப்பட வேண்டுமானால் அடிப்படை மூலப் பொருட்களைத் தாராளமாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய சூழ்நிலை இருக்க வேண்டும். தேவையான மூலப்பொருட்களில் ஒன்று குறைந்து ஏனையவைகள் பூரணமாக இருந்த போதிலும் பணிகள் நிறைவு பெறமாட்டாது. எனவே தேவையான எல்லாப் பொருட்களும் இணைந்தால் தான் சீராக ஒரு கட்டடத்தை எழுப்ப முடியும். கடந்த காலங்களில் கட்டட அமைப்புகள் தாமதம் அடைய மணல் தட்டுப்பாடு காரணமாக இருந்தது. மணல் அகழ்வதிலும் அதனை இடத்துக்கு இடம் எடுத்துச் செல்வதிலும் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளே இதற்குக் காரணமாக இருந்தது. இதனால் தனியார் கட்டடப் பணிகளும், அரசதுறைகளில் கட்டட பணிகளும் காலவரையறை சொல்ல முயடி¡து தாமதித்துக் கொண்டே இருந்தன. அபிவிருத்தி அடைந்துவரும் ஒரு நாட்டுக்கு இது பொருத்தமான சூழ்நிலையாகத் தென்படவில்லை. இதனைக் கருத்தில் கொண்ட ஜனாதிபதி மேற்கொண்ட சமயோசித நடவடிக்கை வளர்ந்து வரும் கட்டடத் துறைக்கு அபார ஊக்குவிப்பாக அமைந்தது. கட்டுப்பாடுகள் தளர்ந்த கையோடு தட்டுப்பாடுகள் அகன்றன. கட்டடப் பணிகள் புத்தூக்கம் பெற்றன. அபிவிருத்தி செயற்பாடுகள் தங்கு தடையின்றி நடந்தேறிவருகின்றன. (ஐ) |
||
|
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். webmanager@lakehouse.lk |