இலங்கையில் தெற்காசிய
ஆசிரியர் பயிற்றுவிப்பாளர்
பயிற்சி நிலையம்
மீபேயில் நிறுவ அமைச்சரவை அங்கீகாரம்
587 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
ஆசிரியர் பயிற்றுவிப்பாளர்களுக்கான தெற்காசிய பயிற்சி நிலையம் வெகுவிரைவில்
இலங்கையில் ஸ்தாபிக்கப்படவுள்ளது. இதற்காக அனுமதி அமைச்சரவை வழங்கியிருப்பதாக
கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தினகரனுக்கு தெரிவித்தார்.தெற்காசிய நாடுகளில் ஆசிரியர் பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி நிலையம் முதன்
முதலில் இலங்கையிலேயே ஸ்தாபிக்கப்படவுள்ள நிலையில் மீபேயில் இப் பயிற்சி நிலையத்தினை
நிறுவுவதற்கென அரசாங்கம் 587 மில்லியன் ரூபாவினை ஒதுக்கியிரு ப்பதாகவும் அமைச்சர்
பந்துல குணவர்தன கூறினார்.
விவரம் » |
|
|
 |
|
|
அரசாங்கத்தின் வருமான வீதத்தை அதிகரிக்க
தேசிய திட்டம்
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசாங்கத்தின் வருமான வீதத்தை அதிகரிப்பதற்கான
செயற்றிட்டங்களை அரசு முன்னெடுத்திருப்பதாக மனித வளங்கள் சிரேஷ்ட அமைச்சர் டியூ
குணசேகர தெரிவித்தார். இதன் ஒரு அங்கமாக வட மாகாண அரச நிருவாக அதிகாரிகளுக்கு
விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருப்ப தாகவும் அவர்
குறிப்பி ட்டார்.
விவரம் » |
|
2013 மே மாதத்திற்குள் இனப்பிரச்சினை
ஜனாதிபதியினால் தீர்த்து வைக்கப்படும்
பிரபல ஜோதிடர் எஸ். தெய்வநாயகம்
இலங்கையில் உள்ள பிரபல ஜோதிடரும், இந்து சமய அலுவல்கள் விவகார திணைக்களத்தின்
முன்னாள் பிரதிப் பணிப்பாளருமான எஸ். தெய்வநாயகம் அவர்கள் தமிழ் வார இதழ் ஒன்றுக்கு
எழுதிய வியாழன் பார்வையும் விளையும் பலாபலன்கள் என்ற ஜோதிட ஆய்வுக் கட்டுரையில்
இலங்கையைப் பொறுத்த வரை வியாழன் நான்காம் வீட்டுக்கு வந்துள்ள தென்றும் இதனால்
எதிர்பார்க்கும் பாரிய தீய விளைவுகள் இலங்கைக்கு ஏற்படப் போவதில்லை என்றும்
கூறியுள்ளார்.
விவரம் » |
|
|

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் 20வது ஆண்டு
நிறைவையொட்டி நேற்று கல்லூரி முதல்வர் ஏ.எல்.ஏ. றசூல் தலைமையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் பந்துலகுணவர்தன, ரவூப் ஹக்கீம், ஏ.எல்.எம். அதாஉல்லா ஆகியோர் பிரதம
அதிதிகளாகக் கலந்து கொண்டனர். படத்தில் அதிதிகள் வரவேற்று அழைத்துவரப்படுகின்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான ஹசன் அலி, ஏ.எச். ஹரீஸ், பைசால் காசிம், பியசேன, மாகாண
அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை உட்பட உயர் அதிகாரிகள் காணப்படுகின்றனர். (ஐ.எல்.எம்.ரிஸான்,
ரி.கே.ரஹ்மத்துல்லாஹ், அரூஸ், றிபாஸ்) |
|
|
 |
|
|
|
|
|