“நில அதிர்வுகளால் பாரிய விளைவுகள் ஏற்பட வாய்ப்பில்லை”
“நில அதிர்வுகளால்
பாரிய விளைவுகள் ஏற்பட வாய்ப்பில்லை”
லக்ஷ்மி பரசுராமன்
நாட்டின் சில பிரதேசங் களில் கடந்த வாரம் உணரப் பட்ட நில அதிர்வுகளால் பாரதூர மான
விளைவுகள் ஏற்படு வதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை. ஆகையி னால் பொதுமக்கள் இது
குறித்து வீணாக அச்சம டையத் தேவையில்லையென புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப்
பணியகத்தின் பிரதிப் பணிப்பாளர் பேர்னார்ட் பிரேம் தெரிவித்தார்.
இருப்பினும் நுண்ணிய அதிர்வுகள் குறித்தும் கூட நாம் மிகுந்த அவதானத்துடன் பதிவுகளை
முன்னெடுத்து வருகிறோம். எதிர்காலத்தில் இவை தொடர்பான பதிவுகளை சேகரித்து வைக்கும்
வகையில் பல நிலையங்கள் நிறுவப்படுவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு
வருவதாகவும் அவர் கூறினார்.
கடந்த வாரம் சிறியளவிலான நில அதிர்வுகள் உணரப்பட்டன. இறுதியாக சனிக்கிழமை
இடம்பெற்றது. அண்ணளவாக 3.3 ரிச்டர் அளவுடையதென கணக்கி டப்பட்டுள்ளது. இத்தகைய
நுண்ணிய ரிச்டர் அளவுடைய நில அதிர்வுகளால் பாரதூரமான விளைவுகள் ஏற்படுவதற்கு
வாய்ப்பு இல்லை. இவை பாரியளவில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துவதற்கு 500, 600
ஆண்டுகளோ அல்லது அதனையும் விட கூடுதல் காலமோ செல்லலாம்.
தற்போது எம்மால் செய்ய
முடிந்தது உணரப்படும் நுண்ணிய நில அதிர்வுகளது பதிவுகளையும் கவனமாக பேணி
வருவதேயாகும். இவை எமது அடுத்த பரம்பரையினருக்கு புவிச்சரிதவியல் தொடர்பான
ஆராய்ச்சிகளை முன்னெடுக்க உதவியாக இருக்குமெனவும் அவர் கூறினார்.