சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 119 பேர் கைது
சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா
செல்ல முற்பட்ட 119 பேர் கைது
காலிமுகத்திடல், நீர்கொழும்பு பகுதிகளில் மடக்கிப் பிடிப்பு
* 6 முகவர்களும் கைது
* ஒருவரிடம் ரூ. 2 இலட்சம் அறவீடு
எப். எம். பைரூஸ்
சட்ட விரோதமாக அவுஸ்திரே லியாவுக்கோ அல்லது வெளிநாடு ஒன்றுக்கோ அனுப்பி வைக்கப்பட
இருந்த 113 பேர் காலிமுகத்திடல் உட்பட நீர்கொழும்பு பகுதிகளில் வைத்துக் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று அதிகாலை கொழும்பு மோசடி புலனாய்வுப் பிரிவினர் நடத்திய தேடுதலின் போது
இவர்கள் கைதாகினர். இவர்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்த ஆறு
முகவர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களை படகு வரை ஏற்றிக் கொண்டு சென்ற லொறியும் ஏழு டொல்பின் ரக வான்களும்
கைப்பற்றப் பட்டன. ஒருவரிடம் இருந்து 02 லட்ச ரூபா வரை பெறப்பட்டுள்ளது.
இவர்கள் நீர்கொழும்பு, சிலாபம் ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இந்த ஆட்களை வெளி நாடுகளுக்கு அனுப்பும் தொழிலை மேற்கொண்ட நபர் 316 இலட்சம் ரூபாவை
பெற்றுள்ளமை தெரிய வந்துள்ளது. இவர் சிலாபம் பகுதியைச் சேர்ந்தவர். இத் தகவலை பொலிஸ்
ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இத்தகைய மனித வியாபாரத்துக்குள் சிக்கி ஏமாறி பணத்தை மட்டுமன்றி வாழ்வையும்
அழித்துக் கொள்ள வேண்டாமென்றும் அவர் ஆலோசனை கூறியுள்ளார்.