அரசியலில் 42 வருடங்களை நிறைவு செய்துள்ள ஜனாதிபதி மேலும் பல்லாண்டுகளுக்கு
நல்லாட்சி புரிவார்
அரசியலில் 42 வருடங்களை நிறைவு செய்துள்ள
ஜனாதிபதி மேலும் பல்லாண்டுகளுக்கு நல்லாட்சி புரிவார்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அரசியலில் அறிமுக மாகி 42 ஆண்டுகள் கடந்த
ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது. 24 வயதில் பாராளுமன்றத்தில் பெலியத்தை தொகுதியின்
சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட இளைஞன் மஹிந்த, 23 ஆயிரத்து
103 வாக்குகளையும் அவருக்கு எதிராக போட்டியிட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் அரசியல்
ஜாம்பவானான டாக்டர் ரஞ்சித் அத்தபத்தவுக்கு 16 ஆயிரத்து 499 வாக்குகளை
பெற்றிருந்தார். இந்தத் தேர்தலில் சுமார் 6 ஆயிரத்து 500 வாக்கு களினால் மஹிந்த
ராஜபக்ஷ வெற்றிவாகை சூடினார்.
அந்தத் தடவை பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பிப்பதற்கான மகாதேசாதிபதியின் உரைக்கு
நன்றி தெரிவிக்கும் உரையை முன் மொழி செய்யும் சந்தர்ப்பம் மஹிந்த ராஜபக்ஷ இளம்
பாராளு மன்ற உறுப்பினருக்கு கிடைத்தது. அவர் பாராளுமன்றத்தில் அன்று உரை
நிகழ்த்துகையில், 'அமைதியாக வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்த இந்த மக்களுக்கு நாம்
அடைந்த வெற்றி, அவர்க ளின் வாழ்க்கையில் ஒளிவிளக்கை ஏற்றும் மாபெரும் வெற்றியாக
அமைந்துள்ளது.
இந்த வெற்றி முழு உலகத்தையே பேராச்சரியத் தில் ஆழ்த்தியுள்ளது. இந்த
மாபெரும் சாதனையை ஏற்படுத்திய எங்களுடைய மக்களின் சார்பில், அரசாங்கத்தின் சிம்மாசன
பிர சங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணையை முன்மொழியும் வாய்ப்பு எனக்கு
கிடைத்திருப்பது குறித்து, நான் பெரு மகிழ்ச்சி யடைகிறேன்' என்றார்.
கெளரவ சபாநாயகர் அவர்களே, இலங்கையின் சமீபகால வரலாற்றில் இடம்பெற்ற எங்களில் பலரும்
மறந்து இருக்கும் ஒரு நிகழ்வை இங்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். 1948ம்
ஆண்டில், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நாட்டை விட்டு அகன்று செல்லும் போது தங்களால்
நன்கு பயிற்சியளிக்கப்பட்ட கறுப்பு இன ஆங்கில முதலாளித்துவவாத சக்திகளிடம் நாட்டின்
நிர்வாகத்தை ஒப்படைத்து சென்று விட்டனர்.
இவர்களுக்கு சிங்கள மொழி தெரியாது. சிங்கள நாட்டையும், சிங்கள வரலாற்றையும், சிங்கள
கலாசாரத்தையும் இவர்கள் தெரிந்து வைத் திருக்கவில்லை. அதனால், அன்று சிங்கள மொழி ஒரு
சிலரினால் தான் பயன்படுத்தப்பட்டது. இதன் எதிரொலியாக சங்கைக்குரிய மகாசங்கத்தினரும்,
பெருமதிப்பிற்குரிய சுதேச வைத்தியர்களும், அரசாங்கத்தின் அனுக்கிரகம் இன்றி, அநாதை
நிலைக்கு தள்ளப் பட்டனர் என்று கூறினார்.
சிறிலங்கா சுதந்திரக்கட்சி கடந்த 18 வருடங்களாக ஏனைய சமதர்மவாத சக்திகளுடன் இணைந்து
ஒற்றுமையாக, இந்நாட்டில் நசுக்கப்படும் மக்களை வெற்றிகரமான முறையில் சமதர்மவாதத்தை
நோக்கி அழைத்து சென்றிருப்பதை நான் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகி றேன். இதனால் தான்
எங்கள் நாட்டின் வரலாற்றில் ஒரு புதுயுகத்தை யும், புது மார்க்கத்தையும்
ஏற்படுத்திய ஒரு முக்கிய தினமாக அன்றைய தினத்தை நான் கருதுகிறேன் என்றும் மஹிந்த
ராஜபக்ஷ தமது உரையில் கூறினார்.
இளம் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் கன்னிப் பேச்சை பாராளுமன்றத்தில்
எதிர்க்கட்சி ஆசனத்தில் அமைதியாக அமர்ந்து செவிமடுத்துக் கொண்டிருந்த முன்னாள்
ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, தமது உரையில் இளைஞர் மஹிந்தவுக்கு அரசியலில் ஒரு சிறந்த
எதிர்காலம் இருக்கிறது. அவர் ஒரு நாள் இலங்கையில் மக்கள் புரட்சி ஒன்றை ஏற்படுத்தி
ஒரு சிறந்த ஜனநாயகவாதியாக மாறுவார் என்று பாராட்டினார்.
ஜே.ஆர். ஜயவர்தன, அன்று கட்டியம் கூறியது இன்று உண்மை யாகிவிட்டது. சாதாரணமாக
அரசியலில் தேசத்தலைவராக மாறு வதற்கு பணவலுவும், குடும்ப செல்வாக்கும் இருக்க
வேண்டும். அதனால்தான் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க, டட்லி சேனா நாயக்க, ஜே.ஆர்.
ஜயவர்தன போன்ற தலைவர்கள் உருவாக்கப் படுவதற்கு சாதகமான சூழ்நிலை அன்று நிலவியது.
திரு. மஹிந்த ராஜபக்ஷ, தென்னிலங்கையில் தோன்றிய ஒரு உதய சூரியனாக விளங்கியதனால்,
அவருக்கு மக்களின் செல்வாக்கு மாத்திரமே பின்னணியில் அரசியல் வளர்ச்சிக்கு அணிகலனாக
அமைந்திருந்தது. எத்தனையோ துன்பத் துயரங்களை அனுபவித்த பின்னரே இந்த மக்கள் தலைவர்
இன்று ஜனாதிபதி என்ற உயர் பதவியில் அமர்ந்திருக்கிறார். அவர் செய்யாத
குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டு, ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசாங்கத் தினால்
கொடுமைப்படுத்தப்பட்டார்.
திரு. மஹிந்த ராஜபக்ஷ அவர்களைப் பற்றி பேசும் போது அவரது தந்தை டி.ஏ. ராஜபக்ஷ
அவர்களை நாம் மறந்துவிடலாகாது. எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க ஐக்கிய தேசிய கட்சி
அர சாங்கத்தில் இருந்து ராஜினாமா செய்து, இலங்கையில் மக்கள் ஆட்சியை
உருவாக்குவதற்காக ஒரு வலுவான எதிர்க்கட்சியை ஏற்படுத்தினார். இலங்கையில் மக்கள்
ஆட்சி மலரச் செய்வதற்கு எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க எடுத்த முயற்சிக்கு அவரு
க்கு பின்னணியில் இருந்து உறுதுணை புரிந்தவர் பெருந்தலைவர் டி.ஏ. ராஜபக்ஷவாகும்.
ஒரு தடவை தனது அரசாங்கத்தைப் பற்றி கருத்து தெரிவித்த எஸ். டபிள்யு.ஆர்.டி.
பண்டாரநாயக்க, நான் ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து விலகுவது என்ற தீர்மானத்தை
எடுத்த போது, திரும்பிப் பார்த்தேன். அப்போது எனது நிழல் எனக்கு தென்பட்டது. எனது
நிழலை நான் உற்றுப் பார்த்த போதுதான் அது டி.ஏ.ராஜபக்ஷ என்பதை என்னால் அடையாளம் காண
முடிந்தது என்று திரு. டி.ஏ. ராஜபக்ஷவை பகிரங்கமாக பாராட்டியும் இருக்கிறார்.
தற்போது 42 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும்
இந்நாட்டின் தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மேலும் பல்லாண்டுகளுக்கு புகழின்
சிகரத்தில் வீற்றிருந்து நல்லாட்சி புரிய வேண்டுமென்று வாழ்த்துகிறோம்.