ஹிஜ்ரி வருடம் 1433 ஜமாதுல் ஆகிர் பிறை 30
நந்தன வருடம் வைகாசி மாதம் 09ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,MAY, 22, 2012
வரு. 80 இல. 120

இலங்கைக்கு நிபந்தனையற்ற அடிப்படையில் உதவி

கட்டார் அறிவிப்பு

இலங்கை துரிதமாக அபிவிருத்தி அடைவதைக் காண்பதே கட்டார் ராஜ்ஜியத்தின் இலக்கு என்று அந்நாட்டு அமீர் ஷெய்க் ஹமாத் பின் கலீபா அல் தானி மற்றும் அந்நாட்டு பிரதமர் ஹமாத் பின் ஜாசிம் பின் ஜாபர் அல்தானி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.இலங்கையின் துரித அபிவிருத்திக்காக ஒப்பந்தங்கள் மற்றும் நிபந்தனைகள் இன்றி தேவையான சகல ஒத்துழைப்புகளையும் வழங்குவதற்கு கட்டார் தயாராக இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் நேற்று முன்தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இவர்கள் மேற்கண்டவாறு குறிப்பி ட்டுள்ளனர்.

விவரம் »

விவசாயிகள் அடிக்கடி இடைத்தரகர்களின் தாக்கங்களுக்கு உள்ளாவதை தடுக்கும் பொருட்டு உற்பத்தியை நோக்கமாகக் கொண்ட விவசாய கூட்டுறவு முறை ஒன்றை ஆரம்பிப்பேன்.

- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

மொழிமூலமான நல்லிணக்கத்தை ஏற்படுத்த சமூக மேம்பாட்டு உதவுனர்கள்

மும்மொழி வலயங்களாக
30 இடங்கள் அடையாளம்

சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து மாவட்டங் களிலும் மொழிப் பிரச்சினை களைக் கையாள்வதற்கு சமூக மேம்பாட்டு உதவுனர்கள் நியமிக்கப்படவிருப்பதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணய கார தெரிவித்தார். கூடிய விரைவில் அனைத்து மாவட் டங்களுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும், இவர்களுக்கு மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் . . . . .

விவரம் »

100 வருட வரலாற்றில் முதற் தடவை; தானிய ஏற்றுமதி

10,000 மெ. தொ. சோளம் தாய்வான், கனடாவுக்கு இன்று ஏற்றுமதி

வெளிநாட்டிற்கு தானியம் ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையின் முதற் கட்ட மாக 10,000 மெற்றித் தொன் சோளம் தாய்வான் மற்றும் கனடா நாடுகளுக்கு இன்று ஏற்றுமதி செய்யப் படுகின்றது. ஏற்றுமதிக்குப் பொருத்தமான தரம் வாய்ந்த அரிசியை உற்பத்தி செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவ துடன் விரைவில் 20,000 மெற்றிக் தொன் சிவப்பு அரிசியைத் தென்னா பிரிக்காவுக்கு அனுப்பவும் தீர்மானிக்கப் பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

விவரம் »

கடந்தகால பரீட்சைகளின் வினா விடைகள் அடங்கிய நூல் வெளியீடு

கல்வி அமைச்சின் நடவடிக்கைக்கு மாணவர்கள் பெரு வரவேற்பு

கல்வியமைச்சு நடந்து முடிந்த க. பொ. த. சாதாரணதரம் மற்றும் உயர்தர பரீட்சை வினாத்தாள்களை விடைகளுடன் புத்தகங்களாக அச்சிட்டு விற்பனைக்கு வைத்துள்ளது. இப்புத்தகங்களை கல்வி அமைச்சிலும் ஏனைய புத்தக சாலைகளிலும் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று உத்தியோகப் பூர்வமாக தெரிவித்தார்.இது தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று கல்வி அமைச்சில் நடைபெற்றது.

விவரம் »

கட்டார் இஸ்லாமிய நூதனசாலைக்கு நேற்று விஜயம்செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அங்கு வைக்கப்பட்டிருக்கும் அல்-குர்ஆனைப் பார்வையிடுவதைப் படத்தில் காணலாம். ஜனாதிபதியுடன் சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி, அமைச்சர்கள் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், ரவூப் ஹக்கீம், ரிஷார்ட் பதியுத்தீன், பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் காணப்படுகின்றனர். (படம்: சுதத் சில்வா)