ஹிஜ்ரி வருடம் 1433 ஜமாதுல் ஆகிர் பிறை 30
நந்தன வருடம் வைகாசி மாதம் 09ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,MAY, 22, 2012
வரு. 80 இல. 120
 

சிரிய ஆதரவு, எதிர்ப்பாளர்களுக்கு இடையில் லெபனானில் மோதல் : இருவர் பலி: 18 பேர் காயம்

சிரிய ஆதரவு, எதிர்ப்பாளர்களுக்கு இடையில் லெபனானில் மோதல் : இருவர் பலி: 18 பேர் காயம்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று இரவு ஏற்பட்ட கலவரத்தில் இருவர் கொல்லப்பட்டதோடு 18 பேர் காயமடைந்துள்ளனர்.

பெய்ரூட்டில் நேற்று முன்தினம் சிரிய எதிர்ப்பு மதத் தலைவர்கள் இரு வரை லெபனான் இராணுவம் சுட்டுக்கொன்றதைத் தொடர்ந்து இந்த கலவரம் வெடித்துள்ளது. இதன்போது சிரிய அரச எதிர்ப்பு மற்றும் ஆதரவு குழுக் களுக்கு இடையில் மோதல் வெடித்துள்ளது.

அயல் நாடான சிரியாவில் கடந்த ஆண்டு மார்ச் தொடக்கம் நீடிக்கும் அரச எதிர்ப்பு போராட்டங்களை தொடர்ந்து அது குறித்து லெபனானில் மோதல்கள் வெடித்துள்ளன.

இது முதல் முறையாகும். சிரிய விவகாரத்தில் லெபனான் எவ்வளவு பிரிந்திருக்கிறார்கள் என்பதை இந்த மோதல்கள் வெளிக்காட்டுவதாக அங்கி ருக்கும் பி. பி. சி. செய்தியாளர் குறிப்பிட் டுள்ளார். முன்னதாக லிபிய தலைநகர் திரிபோலியிலும் சிரிய ஆதரவு, எதிர்ப் பாளர்களுக்கு இடையில் கடந்தவாரம் மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிரிய எதிர்ப்பு மதத் தலைவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு பெய்ரூட்டில் நேற்று மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதற்கு எதிராக சிரிய அரச ஆதரவாளர்கள் செயற்பட்டதைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது ஆயுத தாரிகள் இயந்திர துப்பாக்கி, கிரனேட் மூலம் தாக்குதல் நடத் தியுள்ளனர்.

எனினும் தற்போது அங்கு அமைதி நிலவுவதாக செய்தி வெளியாகி யுள்ளது. சிரிய, லெப னானுக்கு இடையில் வரலாற்று ரீதியில் அரசியல் தொடர்பு நீடித்துவருகிறது. லெபனானில் கடந்த 29 ஆண்டுகள் நிலைகொண்டிருந்த சிரியப் படை கடந்த 2005 ஆம் ஆண்டி லேயே வாபஸ் பெறப்பட்டது. எனினும் லெபனானின் அரசியலில் சிரியா தொடர் ந்து செல்வாக்கு செலுத்தி வருகிறது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி