முழுமையான டைனோசர் எலும்புக்கூடு நியூயோர்க்கில் 1.05 மில்லியன் டொலருக்கு ஏலம்
விடப்பட்டது. எனினும் இந்த விற்பனைக்கு எதிராக மொங்கோலிய அரசு சட்ட நடவடிக்கை
எடுத்துள்ளது.
ஹரிடேஜ் அக்ஷன் என்ற அமைப்பினால் கண்டெடுக்கப்பட்ட இந்த எலும்புக்கூட்டுக்கு
மொங்கோலிய அரசு சொந்தம் கொண் டாடுகிறது. 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரான இந்த
எலும்புக்கூடு தென் மொங்கோலியாவின் கொபி பாலை வனத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த எலும்புக் கூட்டை ஏலம் விடுவதற்கு எதிராக டெக்ஸாஸ் நீதிமன்றம்
கடந்த வாரம் விதித்திருந்த தடையை மீறி நியூயோர்க்கில் நேற்று முன்தினம் இது ஏலம்
விடப்பட்டது. எனினும் இது சட்டவிரோதமானது என மொங்கோலிய அரசு கூறியுள்ளது.