ஹிஜ்ரி வருடம் 1433 ஜமாதுல் ஆகிர் பிறை 30
நந்தன வருடம் வைகாசி மாதம் 09ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,MAY, 22, 2012
வரு. 80 இல. 120
 
பூமியை நெருங்கி வரும் 1,40,000 தொன் விண்கல்

பூமியை நெருங்கி வரும் 1,40,000 தொன் விண்கல்

தொலைத்தொடர்பு செய்மதிகள் சேதமடையும் அபாயம்

பூமியை நெருங்கி வரும் 150 அடி அகலமான 1,40,000 தொன் கொண்ட விண் கல்லினால் தொலைத் தொடர்பு செய்மதிகள் சேதத்திற்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக வானியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஸ்பெயினிலுள்ள பசக்ரா தொலைகாட்டியின் மூலம் அவதானிக்கப்பட்ட ‘டி ஏ 14’ என்ற விண் கல் எதிர்வரும் 2013 பெப்ரவரி 15 ஆம் திகதி பூமியை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த விண் கல் செய்மதிகளில் சேதத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனினும் இந்த விண் கல் பூமியை தாக்குவதற்கு 0.0031 வீதமே வாய்ப்பு இருப்பதாக நாசா குறிப்பிட்டுள்ளது. இந்த விண் கல் பூமியை தாக்கும் பட்சத்தில் அது 2.4 இலட்சம் தொன் வெடி பொருட்கள் ஏற்படுத்தும் சேதத்தை கொண்டதாக இருக்கும் என கருதப்படுகிறது.

எனினும் இந்த விண் கல்லின் சுழற்சிப் பாதை குறித்து நாசா இன்னும் தெளிவாக கணிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி