ஹிஜ்ரி வருடம் 1433 ஜமாதுல் ஆகிர் பிறை 30
நந்தன வருடம் வைகாசி மாதம் 09ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,MAY, 22, 2012
வரு. 80 இல. 120
 
ஊவா மாகாணத்தில் நேற்று ஐஸ் மழை

ஊவா மாகாணத்தில் நேற்று ஐஸ் மழை

ஊவா மாகாணத் தின் பல்வேறு பகுதிகளில் நேற்று நண்பகல் ஒரு மணி முதல் ஐஸ் மழை பெய்யத் தொடங்கியது.

தியத்தலாவை, கஹகொல்ல, பண்டாரவளை, எல்லகம, பங்கதெனிய போன்ற இடங்களிலேயே இந்த ஐஸ் மழை பெய்துள்ளது. மலையகத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலஅதிர் வினையடுத்து காலநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

நேற்று நண்பகல் ஒரு மணியளவில் காற்றுடன் கூடிய அடை மழை பெய்யத் தொடங்கியதை தொடர்ந்தே ஐஸ் மழை பெய்தது. சுமார் அரை மணிநேரம் தொடர்ச்சியாக பெய்த ஐஸ் மழை காரணமாக பிரதேசமெங்கும் வெள்ளக்காடாக காட்சியளித்தது.

ஐஸ் மழை பெய்த வேளை, பாடசாலை விடும் நேரமாகையால் மாணவர்களும் பொதுமக்களும் ஐஸ் மழையில் நனைந்தும் ஐஸ் கட்டிகளை பொறுக்கி உண்பதிலும் அதிகம் ஆர்வம் காட்டினர். ஐஸ் மழையில் கிடைக்கும் ஐஸ் கட்டிகளை உண்பதால் வயிற்றில் ஏற்படும் நோய்கள் குணமாகுமென ஐதீகம் மலையகத்திலிருந்து வருவதனால், மக்கள் தமது குடைகளைக் கொண்டும் பாத்திரங்களினூடாகவும் வானத்திலிருந்து விழுந்த ஐஸ் கட்டிகளை சேகரிக்கவும் செய்தனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி