மேல் கொத்மலை நீர் தேக்கத்தில் விழுந்து சிறுவன் பலி
மேல் கொத்மலை நீர்
தேக்கத்தில் விழுந்து
சிறுவன் பலி
எம். எஸ். பாஹிம்
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் விழுந்து 09 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் மாலை இடம் பெற்றதாக நுவரெலியா மாவட்ட இடர்
முகாமைத்துவ இணைப்பாளர் எரந்த ஹேமவர்தன கூறினார். தலவாக்கலை தமிழ் மகா
வித்தியாலயத்தில் தரம் நான்கில் கல்வி கற்கின்ற தினேஷ் குமார் எனும் சிறுவனே இவ்வாறு
இறந்துள்ளார்.
மேலதிக வகுப்பிற்குச் சென்றுள்ள இவர் சக நண்பர்கள் இருவருடன்
நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள பாலத்தில் இருந்து மீன்பிடித்துள்ளனர். தினேஷ்குமார்
கால் தவறி நீர்த்தேக்கத்தில் விழுந்துள்ளதோடு மற்ற இரு சிறுவர்களும் பயந்து
ஓடியுள்ளனர். சிறுவனின் புத்தகப்பையும் செருப்பும் நேற்று காலை தலவாக்கலை நானுஓயா
தோட்ட பாலத்திற்கருகில் இருந்து கண்டுபிடிக்கப் பட்டது.
கடற்படையின் உதவியுடன் சிறுவனின் சடலத்தை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
நீர்த்தேக்க வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் மீட்பு பணிகளில் பாதிப்பு
ஏற்பட்டுள்ளது.