வைக்கோல் என்பது நெற்பயிர்ச்செய்கையில், அறுவடையின் பின்னர் மீதமாகின்ற
விவசாயப்பயிர்ச் செய்கை உபவிளை பொருளாகும். (Agriculture by Product) அதாவது
பயன்படுத்தப்படாத மீதமாகும் பொருட் களில் ஒன்றாகும். வைக்கோல் இலங்கை முழுவதிலும்
கோடைகாலத்தின் போது அசைபோடும் விலங்குகள் அல்லது அசையூண்விலங்குகளான மாடுகள்,
எருமைமாடுகள் போன்றவற்றுக்கு உணவாக பயன்படுத்தக்கூடிய ஒரு நார்த்தன்மையான உணவாகும்.
வைக் கோலில் உள்ள விஷேட தன்மை யாதெனில் வைக்கோலின் இலைப் பகுதியிலும் பார்க்க
தண்டுப்பகுதி விரைவில் சமிபாடடைகின்றமையாகும். ஆகவே அறுவடையின் போது நெற் பயிர்களை
நிலத்திற்கு மிகவும் அண் மித்து வெட்டுவது மிகவும் பயன்மிக்க தாகும். வைக்கோலில்
அடங்கியுள்ள இரசாயன உள்ளடக்கங்கள் (Chemical Composition) மற்றும் அதன் உலர்
பொருட்களின் (Dry matter) வீதம் என்பன கீழே தரப்பட்டுள்ளன.
மூலம்: மாடு எருமை வளர்ப்பு
அட்டவணையின் பிரகாரம் வைக் கோலிலுள்ள போஷணை கறவைப் பசுக்களுக்கு போதுமானதல்ல. எனவே
பால்கறக்கும் கறவைப்பசுக்களுக்கு புரதம் அதிகளவுள்ள உணவு வழங்க வேண்டுமாதலால்
வைக்கோலின் போசாக்கினை அதிகரிக்க வேண்டிய தேவை உண்டு. வைக்கோலில் உள்ள போசாக்கின்
பெறுமதி மற்றும் தரம் ஆகியவற்றை பாதிக்கும் காரணிகளா வன. பயிர்வகை,
அப்புறப்படுத்தும் பகுதி, பயிர்ச்செய்கை முறை, வளர்ச்சி அளவு, உரப் பாவனை, காலநிலை
நிலைமை, வெட்டப்படும் உயரம் மற்றும் களஞ்சியமுறை போன்றவற்றை குறிப்பிடலாம்.
இதற்கும் மேலாக வைக்கோல் பொருட்டு மேற்கொள்ளப்படும் பல் வேறு சிகிச்சை முறைகளிலும்,
அதன் போசாக்கு மட்டத்தை உயர்த்தலாம். இங்கு பண்ணையாளர்களுக்குத் தேவைப்படுவது
மிகவும் இலகுவான, இலாபகரமான, பாதுகாப்பான மற்றும் மிகவும் வினைத்திறமிக்க முறை
அல்லது செயன்முறை ஆகும்.
இலங்கையில் பரவலாக பயன்படுத் தப்படுகின்ற வைக்கோல் சிகிச்சை முறை இருவகைப்படும்.
அவையாவன.
இது மிகவும் இலகுவானதும் இலாபகரமானதுமான சிகிச்சை அளிப்பு முறையாகும். இதன் மூலம்
1. பேசணைப் பெறுமதி அதிகரிக்கும். உதாரணம்: மொத்த புரதத்தின் அளவு அதிகரிக்கும்.
2. சமிபாடடையும் தன்மை அதிகரிக்கும்
3. உணவு உட்கொள்ளல் அதிகரிக்கும்
யூரியா சிகிச்சையளிப்பு முறை இரு வகையில் மேற்கொள்ளப்படும்.
(அ) உடனடியான முறை
(ஆ) சைலேஜ் முறை; அல்லது குழிகாப்பு தீவன முறை
(அ) உடனடி முறை இச்செயன்முறையின் போது யூரியா சிகிச்சையளிக்கப்பட்ட அன்றைய தினமே
சிகிச்சையளிக்கப்பட்ட வைக் கோலை உணவாக வழங்க முடியும்.
முதலில் 1-1.5% யூரியா கரைசலை தயார் செய்து கொள்ளவும். (10-15 கிராம் யூரியாவினை 1
லீற்றர் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்). பின்னர் வைக் கோலை சீமெந்து தரையில் அல்லது
சுத்தமான மேற்பரப்பில் பரப்பி, வைக் கோல் கிலோ 1 இற்கு 1 லீற்றர் யூரியா கரைசலை (வைக்கோல்:
யூரியா கரை சல் விகிதம் 1:1 ஆகுமாறு) தெளிக்கவும். இதன் பொருட்டு துளை யுள்ளவாளியை
(பூமரங்களுக்கு நிரூற்ற பயன்படுகின்ற பூவாளி) பயன்படுத்த முடியும். அதன் பின்னர்
அவ்வைக் கோலை நன்கு கலந்து 2-3 மணி நேரத்திற்குப் பின்னர் விலங்குகளுக்கு உணவாக
வழங்க முடியும்.
ஆ. சைலேஜ் முறை
இம்முறையில் யூரியா சிகிச்சையளிப்பு மேற்கொள்ளப்பட்ட 7 நாட்களுக்குப் பின்னர்
விலங்குகளுக்கு உணவாகக் கொள்ள முடியும்.
இங்கு வைக்கோலானது துண்டுதுண் டாக வெட்டப்பட்டு சுத்தமான சீமெந்து தரையில் அல்லது
பொலிதீன் உறை யில் பரப்பி வைக்க வேண்டும். அதன் பின்னர் 4% யூரியா கரைசலை தயா ரிக்க
வேண்டும். (யூரியா 40 கிராம் இனை 1 லீற்றர் தண்ணீரில் கரைத்தல் வேண்டும்) பின்னர்
இக் கரைசலை வைக்கோல் ஒரு கிலோவிற்கு யூரியா கரைசல் ஒரு லீற்றர் அளவு (1:1 ஆகு மாறு)
தெளிக்க வேண்டும்.
பின்னர் வைக்கோலை நன்கு கலக்கி வாயு வெளியேறாதவாறு பொலிதீன் உறை
யினால் நன்கு மூடிவிடல் வேண்டும். 7 நாட்கள் வரை களஞ்சியப்படுத்தி வைக்கப்படுதல்
வேண்டும். 7 நாட்க ளின் பின்னர் விலங்குகளுக்கு போதிய அளவை மாத்திரம் அதில் இருந்து
எடுத்து அரைமணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் வெளியில் வைத்து விலங்குகளுக்கு உணவாகக்
கொடுக்க முடியும்.
யூரியா சிகிச்சை அளிப்பின் போது கவனத்திற்குக் கொள்ள வேண்டிய விடயங்கள்
1. ஒவ்வொரு நாளுக்கும் விலங்கு களுக்குத் தேவைப்படும் அளவில் நாளாந்தம் வைக்கோல்
சிகிச்சை அளிப்பு முக்கியமானதாகும்.
02. ஒருநாள் உணவிற்கு எடுக்காத மீதமான வைக்கோலை அடுத்த நாள் உணவாகக் கொடுத்தலாகாது.
03. உடனடி முறையில் யூரியா கலவை 1. 5% மற்றும் சைலேஜ் முறையில் 4% க்கு மேற்படாது
பயன்படுத்த வேண்டும்.
04. களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்ட, சிகிச்சை அளிக்கப்பட்ட வைக்கோல் பொலிதீனால்
மூடப்பட்டு இருந்ததை அகற்றியவுடனேயே உணவாகக் கொடுத்தலாகாது.
05. யூரியா சிகிச்சை அளிப்பு செய் யப்பட்ட வைக்கோலை வழங்குகின்ற போது அதன் பொருட்டு
இலகுவாக சக்தியை வழங்கக் கூடிய உணவுக் கலவையை (Concentrated Feet) அல்லது
மொலாசஸ் சீனிபாணி கலந்த உணவுகள் போன்ற அடர்வுதீவன உணவுகளை வழங்க வேண்டும்.
யூரியா விஷமாதல்
யூரியாவை அளவிற்கு அதிகமாக வைக்கோலுக்கு சேர்த்து, அவ்வைக் கோலை உணவுக்கு
பயன்படுத்துவதின் ஊடாக விலங்குகளுக்கு யூரியா விஷமாக முடியும்.
யூரியா விஷமாகின்ற போது விலங் கின் வாய், மூக்கு மற்றும் கண்கள் ஊதா அல்லது நீல
நிறமாக மாறும். இவ்வாறான சந்தர்ப்பத்தின் போது உடனடியாக வினாக்கிரி அருந்தக்
கொடுத்தல் வேண்டும்.
(1 லீட்டர் 1.5 லீட்டர் அளவு) இவ்வாறு அசைபோடும் விலங்குகளுக்கு
உணவாக வைக்கோல் பயன்படுத்துகையில் அதற்கு யூரியா சிகிச்சை மேற்கொள்வதின் ஊடாக
வைக்கோலின் போசாக்கு வீதத்தை அதிகரிக்க முடியும். அத்துடன் சமி பாடு மற்றும் உணவு
உட்கொள்வதும் அதிகரிக்கும். அதன் ஊடாக விலங்கு களில் அதிக வளர்ச்சி இருப்பதுடன் அவை
குறைந்த செலவில் அதிக உற்பத்தியை பெற்றுக்கொண்டு வெற்றிகரமான மாடு வளர்ப்பிற்கு
உந்து சக்தியாக அமையும்.