ஜனாதிபதியை நண்பனாக கருதும் அரபு நாடுகள் மனித உரிமை மாநாட்டில் இலங்கையை
ஆதரித்தன
ஜனாதிபதியை நண்பனாக கருதும் அரபு நாடுகள்
மனித உரிமை மாநாட்டில் இலங்கையை ஆதரித்தன
வரலாற்று காலம் தொட்டு இலங்கைக்கும் அரபு நாடுகளுக்குமிடை யில் நல்லுறவு நீடித்துக்
கொண்டிருக்கிறது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் இலங்கைக்கு
வர்த்தகம் செய்வதற்காக ஆரம்ப காலத்தில் வந்தார்கள்.
அவர்கள் அன்று இலங்கையில்
இருந்து வாசனைத் திரவியங்களையும், இரத்தினக் கற்களையும் வாங்குவதில் ஆர்வம் காட்டி,
பின்னர் எங்கள் நாட் டில் உள்ள சில எட்டப்பர்களின் உதவியுடன் படிப்படியாக தங்கள்
இராணுவப் பலத்தைப் பயன்படுத்தி இலங்கையை கைப்பற்றி தங் கள் காலனித்துவ நாடாக
மாற்றினார்கள்.
இந்த மூன்று ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த அரசாங்கங்கள் இலங்கை யின் செல்வத்தை
சூறையாடி எமது நாட்டு மக்களின் அரசியல் மற்றும் மனித உரிமைகளை பறித்து, கொடுமையும்
படுத்தினார்கள். இவர்களில் கடைசியாக ஆட்சி செலுத்திய பிரிட்டிஷ் அரசாங்கம் மாத்திரம்
இந்நாட்டு மக்களுக்கு சிறிதளவு நன்மை செய்தததை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
ஆங்கில அறிவை நம்நாட்டு மக்களுக்கு புகட்டி, ஜனநாயகத்தை இலங்கையில் தலைத்தோங்கச்
செய்வதற்கு உதவக்கூடிய முறை யில் வெஸ்ட் மினிஸ்டர் பிரிட்டிஷ் பாராளுமன்ற அரசியல்
சம்பிரதாயத்தை இலங்கைக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். ஆங்கிலேயர் எங்கள் நாட்டின்
தேசிய செல்வத்தை தேயிலையாக மாற்றி சூறையாடியதை எமது மக்கள் மறந்துவிட மாட்டார்கள்.
ஆங்கிலேயர் தங்கள் பதவிக்காலத்தில் ரயில் சேவையையும், மலை யகப் பாதைகளையும்
அமைத்ததும் அவர்கள் இலங்கையில் செய்த சாதனைகளில் ஒன்றாகும். அத்துடன் கொழும்பு
மற்றும் பேராத னைப் பல்கலைக்கழகங்களை உருவாக்குவதிலும் ஆங்கிலேயரின் பங்களிப்பு
இருந்தது.
இவ்விதம் ஐரோப்பிய நாடுகள் இலங்கையை வரலாற்றுக் காலம் முதல் சுரண்டி வந்த போதிலும்
இங்கு வர்த்தகர்களாக வந்த சீன நாட்டு மாலுமிகளும், அரபு நாட்டு மாலுமிகளும்
இலங்கையுடன் வர்த்தகம் செய்த போதிலும் இந்நாட்டு மக்களின் இறைமைக்கு
தீங்கிழைக்கக்கூடிய வகையில் தங்கள் நாடுகளின் இராணுவப் பலத் தைப் பயன்படுத்தி எமது
நாட்டை ஆக்கிரமிப்பு செய்யவில்லை.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு அரபு நாடுகளும், சீனாவும் அன்று முதல்
இன்று வரை இலங்கையின் உண்மையான நட்பு நாடுகளாக இருந்து வருவதற்கு சான்று பகர்கின்றது.
எங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அரசியலில் பிரவேசித்த தினம் முதல் அரபு
நாடுகளின் குறிப்பாக இஸ்ரேலினால் கொடு மைப்படுத்தப்படும் பலஸ்தீனிய மக்களின் ஓர்
உற்ற நண்பனாக விளங்கினார்.
பலஸ்தீனிய மக்களுடன் நெருக்கமாக இருந்தால் அமெரிக்காவையும், மேற்கத்திய நாடுகளையும்
பகைக்க வேண்டியிருக்கும் என்று நம் நாட்டு அரசியல் தலைவர்கள் அஞ்சி பலஸ்தீனத்துடனான
உறவை மேம்படுத்த விரும்பாத காலகட்டத்தில் தென்னிலங்கையில் இரு ந்து தோன்றிய வீரப்
புதல்வரான மஹிந்த ராஜபக்ஷ பலஸ்தீனிய ஒருமைப்பாட்டு இயக்கத்தில் 1970ம் ஆண்டு
தசாப்தத்தில் சேர்ந்து இன்று வரை அவ்வியகத்தின் உரிமைகளுக்காக ஐக்கிய நாடுகள் சபை
முதல் பலதரப்பட்ட சர்வதேச பேரவைகளில் குரல் கொடுத்து வருகிறார்.
தன்னுடைய அரபு நாடுகளுடன் நட்பை உருவாக்கும் கொள்கையினால் ஜனாதிபதி இன்று அரபுலகின்
நண்பனாக கருதி பாராட்டப்படுகிறார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கட்டார் தேசத்தின்
அமீர் ஷேய்க் ஹமாட் பின் கலீபா அல் தானியின் அழைப்பின் பேரில் அங்கு சென்றார்.
1931ம் ஆண்டில் சர்வஜன வாக்குரிமை பெற்ற ஆசியாவின் பழைய ஜனநாயக நாடான இலங்கை
சமாதானம், செளபாக்கியத்துடன் கூடிய ஒரு புதிய யுகத்தை நோக்கி பயணிக்கின்ற இவ்வேளை
யில் டோஹா நகரில் நடைபெறும் பொருளாதார மகாநாட்டில் தமக்கு உரையாற்றுவதற்கு கிடைத்த
சந்தர்ப்பம் குறித்து மகிழ்ச்சி யடைவதாகவும் ஜனாதிபதி கூறினார்.
84 நாடுகளின் 600 பேராளர்கள் வரை பங்குபற்றிய டோஹா மகாநாட் டின் 12ஆவது தொடர் அமர்வு
கட்டார் அமீர் அஷ்ஷெய்க் ஹமாட் பின் கலீபா அல் தானியின் தலைமையில் நடைபெற்றது.
மத்திய கிழக்கின் பொருளாதார முன்னேற்றம் குறித்து இம்மாநாட் டில் ஆராயப்படுகிறது.
மத்தியகிழக்கு, ஐரோப்பா உட்பட ஆசிய நாடுகளும் இம்மாநாட்டில் கலந்து கொள்கின்றன.
கட்டார் தேசத்திற்கும் இலங்கைக்கும் இராஜதந்திர உறவுகள் ஏற்பட்டு 15 வருடங்களாகும்.
அந்நாட்டில் சுமார் ஒரு இலட்சம் இலங்கை யர் தொழில் புரிகின்றார்கள். இதுவே முதல்
தடவையாக இலங்கை யின் அரச தலைவர் ஒருவர் கட்டாருக்கு விஜயம் செய்வது ஒரு
குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வெளிநாட்டு கொள்கையில் அரபு நாடுகளுடனும் குறிப்பாக,
பலஸ்தீனிய நாட்டுடனும், சீனா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற தெற்காசிய
பிராந்திய நாடுகளுடன் தனது நல்லுறவை மேலும் வளர்க்கக்கூடிய வகை யில் தனது
இராஜதந்திர கொள்கையை கடைப்பிடித்து வருகிறார்.
ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள்
மனித உரிமை மாநாட் டில் இலங்கை மீது அழுத்தங்களை கொண்டு வந்த அமெரிக்கா வின்
பிரேரணைக்கு எதிராக அரபு நாடுகள் இலங்கையை ஆதரி த்து வாக்களித்தமை இலங்கை
மக்களுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் கிடைத்த ஒரு மாபெரும் வெற்றி
என்றே நாம் கருதுகிறோம்.