ஹிஜ்ரி வருடம் 1433 ஜமாதுல் ஆகிர் பிறை 30
நந்தன வருடம் வைகாசி மாதம் 09ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,MAY, 22, 2012
வரு. 80 இல. 120
 

எஹலியகொட, கந்தானை, மாரவில மற்றும் ராகமை பிரதேசங்களுக்கு சேவைகளை விஸ்தரித்துள்ள CDB

எஹலியகொட, கந்தானை, மாரவில மற்றும் ராகமை பிரதேசங்களுக்கு சேவைகளை விஸ்தரித்துள்ள CDB

சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் பினான்ஸ் பீ. எல். சி. CDB  அண்மையில் தனது சேவைகளை எஹலியகொட, கந்தானை, மாரவில மற்றும் ராகம ஆகிய பிரதேசங்களுக்கு விஸ்தரித்துள்ளது.

CDB  இந்த பிரதேச மக்களுக்கு தனது நிதியியல் சேவைகளை முழுமையாக வழங்கக் கூடிய விதத்தில் இந்த வாடிக்கையாளர் சேவை நிலையங்கள் செளகரியமான இடங்களில், விரைவாக அடைவதற்கு ஏற்ற விதத்தில் பரந்த வாகனத்தரிப்பிடத்தையும் கொண்டு அமைந்துள்ளன.


CDB இன் நிறைவேற்றுப் பணிப்பாளரும் பிரதம சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை அதிகாரியுமான மல்கம் வீரசூரிய எஹலியகொட கிளையில் முதலாவது வைப்பை வாடிக்கையாளரிடமிருந்து பெற்றுக்கொள்கின்றார்.

இல. 144, பிரதான வீதி, எஹலியகொடவில் அமைந்துள்ள கிளையைCDB  இன் நிறைவேற்றுப் பணிப்பாளரும் பிரதம சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை அதிகாரியுமான மல்கம் வீரசூரிய அவர்களினால் திறந்து வைக்கப்பட்ட அதேவேளை, இல. 164, பேங்க் வீதி, கடவத்தை, ராகமையில் அமைந்துள்ள சேவை நிலையம்CDB  இன் நிறைவேற்றுப் பணிப்பாளரும் பிரதம செயற்பாட்டு அதிகாரியுமான ரோஷன் அபேகுணவர்தன அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

அதேவேளை, இல. 37 ஏ, நீர்கொழும்பு வீதி, கந்தானை மற்றும் இல. 63, சிலாபம் வீதி, மாரவிலயில் அமைந்துள்ள, முறையே கந்தானை மற்றும் மாரவில கிளைகள்,CDB  நிறைவேற்றுப் பணிப்பாளரும் பிரதம கடன் அதிகாரியுமான சசிந்திர முனசிங்க அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த பிரதேசங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் இத்திறப்பு விழாக்களில் கலந்து சிறப்பித்தனர்.

இந்த ஒன்லைன் மூலம் இணைக்கப்பட்ட கிளைகள் மற்றும் சேவை நிலையங்களுடன், இலங்கை முழுவதும் CDB  இன் வாடிக்கையாளர் சேவை நிலையங்கள் 39 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிரான்ட் பினான்ஸ் லங்காவினால் 2012 இல் பட்டியலிடப்பட்டுள்ள இலங்கையிலுள்ள தலை சிறந்த 100 முன்னணி வர்த்தக வார்நாமங்களில் CDB  50ஆம் இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி