|
|
யுத்த வெற்றி விழா கொண்டாட்டம் நாளை
ஏற்பாடு, ஒத்திகை
பூர்த்தி;
பாதுகாப்புச் செயலர் நேரில் பார்வை
யுத்த வெற்றியின் மூன்றாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெற்றி விழா அணிவகுப்பு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் கொழும்பு காலி முகத்திடலில் நாளை காலை
8.00 மணிக்கு கோலாகலமாக இடம்பெறவுள்ளது.இதனை முன்னிட்டு கடந்த 14ம் திகதி ஆரம்பமான ஒத்திகை இன்றுடன் நிறைவு பெறுகிறது.
விவரம் » |
அமைச்சர் ஜீ. எல்.
ஹிலாரி கிளின்டன்
இன்று சந்திப்பு
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்கா சென்றிருக்கும் வெளிவிவகார
அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் இன்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி
கிளின்டனை சந்திக்கின்றார்.அமைச்சர் பீரிஸிற்கும் இராஜாங்கச் செயலாளர் ஹிலாரிக்குமிடையிலான இருதரப்புச்
சந்திப்பின்போது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின்
பரிந்துரைகள் தொடர்பாக ஆராயப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
விவரம் » |
|
சீன கம்யூனிஸ்ட் கட்சி உயர்மட்ட குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு
மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைகு வருகை தந்துள்ள சீன
கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை நேற்று மாலை
அலரி மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது.சீன கம்யூனிஸ்ட் கட்சியின்
அரசியல் மற்றும் சட்ட விவகார குழுக்களுக்கான பிரதிச் செயலாளர் வேவ் லிகுவான்
தலைமையில் 20 பேர் அடங்கிய உயர் மட்ட குழுவினர் நேற்று மாலை கொழும்பு வந்தடைந்தனர்.
விவரம் » |
|
செத்சிரிபாயவில் இரு அலுவலக
கட்டடத் தொகுதிகள் இன்று திறப்பு
செத்சிரிபாயவில் புதிய அலுவலக கட்டடத் தொகுதிகளை ஜனாதிபதி இன்று (18) திறந்து
வைக்கவுள்ளார்.பத்தரமுல்லை செத்சிரிபாயவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 15 அடுக்கு மாடிகள் கொண்ட இரண்டு
புதிய கட்டடத் தொகுதிகளை இன்று (18) வெள்ளிக்கிழமை காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
திறந்து வைக்கவுள்ளார்.
விவரம் » |
|