டெங்கு நுளம்பை ஒழிப்பதற்கு மக்களின் பூரண ஒத்துழைப்பும் அவசியம்
டெங்கு நுளம்பை ஒழிப்பதற்கு
மக்களின் பூரண ஒத்துழைப்பும் அவசியம்
நாடெங்கிலும் தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் நேற்று முதல் இம் மாதம் 20 ஆம் திகதி
ஞாயிற்றுக்கிழமை வரை தீவிரமாக அமுலாக்கப்படுகிறது. நுளம்பினால் ஏற்படும் டெங்கு
மற்றும் மலேரியா போன்ற நோய்கள் இன்று நாடெங்கிலும் பரவி மக்க ளுக்கு பேராபத்தை
ஏற்படுத்திக் கொண்டிருப்பதனால் இந்த நுளம் புத் தொல்லைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி
வைக்க வேண்டு மென்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரி களுக்கு
பணிப்புரை விடுத்துள்ளார்.
நுளம்பு ஒழிப்பு சட்ட நடவடிக்கைகளை கடுமையாக நடைமுறைப் படுத்துமாறு தெரிவித்துள்ள
அமைச்சர், நுளம்பு பெருகும் சூழல் இருந்தால் அவற்றுக்கு பொறுப்பானவர்களை கடுமையாக
தண்டி க்க வேண்டுமென்றும், இத்தகைய குற்றம் இழைப்பவர்களுக்கு நீதி மன்றத்தின் மூலம்
50 ஆயிரம் ரூபா அபராதத்தை அல்லது ஆறு மாத சிறைத்தண்டனையை பெற்றுக் கொடுக்கக்கூடிய
வகையில் சட்டம் திருத்தப்பட வேண்டுமென்றும் யோசனை தெரிவித்துள்ளார்.
ஒரு பாடசாலையில் நுளம்பு இனவிருத்தி செய்வதற்கு சாதகமான இடங்கள் இருந்தால் அதற்கு
பொறுப்பான பாடசாலை அதிபரிடம் விளக்கம் கோரி அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்
கப்பட வேண்டும். அது போன்றே அரசாங்கத் திணைக்களங்கள் மற்றும் தனியார் காரியாலயங்கள்,
உள்ளூராட்சி மன்றங்கள் ஆகிய வற்றில் நுளம்பு இனவிருத்தி செய்வதற்கான சாதகமான இடங்கள்
இருந்தால் அவற்றின் பொறுப்பதிகாரிகளே இந்த குற்றத்திற்கான பொறுப்பாளர்களாக
கருதப்பட்டு அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சாதாரண குடியிருப்புகளில் இத்தகைய டெங்கு நோய் பரவும் சூழ் நிலை இருந்தால் அந்த
வீட்டின் தலைவர் அல்லது தலைவிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சுமார் 10
ஆண்டுகளு க்கு முன்னர் திடீரென்று தோன்றிய நுளம்பினால் பரவும் டெங்கு என்ற ஆள்கொல்லி
நோய் இன்று நாட்டு மக்கள் அனைவருக் கும் மறைந்திருந்து தாக்கும் பயங்கரவாதிகளை விட
மோசமான தீங்கை இழைக்கக்கூடிய வகையில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
1932 ஆம் ஆண்டளவில் இலங்கையின் வடமத்திய பிரதேசத்தில் மத வாச்சி, அநுராதபுரம்,
மின்னேரியா, பொலன்னறுவை ஆகிய பகுதி களில் நுளம்பினால் பரவும் மலேரியா என்ற
நெருப்புக் காய்ச்சல் நோய் நம்நாட்டு மக்களில் பல்லாயிரக்கணக்கானோரை மரணிக்கச்
செய்து, அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களையே அதிர்ச்சிய டையச் செய்தது. இதனால்
குயினின் என்ற ஒரு புதிய மருந்தை இலங்கைக்கு இறக்குமதி செய்து, அதன் மூலம் மலேரியா
நோய் பரவுவதை அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் பூரணமாக கட்டுப் பாட்டுக்குள்
கொண்டுவந்தது. இப்போது மீண்டும் டெங்கு நோயு டன் மலேரியாவும் தலைதூக்க
ஆரம்பித்துள்ளது.
சுகாதார அமைச்சு பிரகடனம் செய்துள்ள தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தில் நாட்டில் உள்ள
எந்தப் பகுதியிலும் நுளம்பு குடம்பிகள் காணப்படுமாயின் அவற்றுக்கு
பொறுப்பானவர்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது விடயத்தில்
நாட்டு மக்களின் நன்மைக்காக இத்தகைய குற்றமிழைப்பவர்களுக்கு எவ் வித தயவு
தாட்சண்யமும் காட்டப்படாது எனவும் அமைச்சு அறி வித்துள்ளது.
இந்த நுளம்பு ஒழிப்பு வாரத்தை வெற்றிகரமாக நாடெங்கிலும் கடைப் பிடிப்பதற்கு
முப்படைகளும் மற்றும் பொலிஸாரும் முழுமையான ஒத்துழைப்பை நல்கி வருகிறார்கள். தேசிய
நுளம்பு வாரத்தின் பிர தான வைபவம் கொழும்பு கிராண்பாஸில் உள்ள பெளஸி தாய் சேய் நல
மத்திய நிலையத்தில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.
பொதுவாக மழைகாலம் ஆரம்பித்தவுடன் டெங்கு நோய் வேகமாக பரவுவதுண்டு. நீர் நிலைகளிலும்
ஏனைய அசுத்தமான சூழலிலும் தேங்கியிருக்கும் நீரில் இருந்தே நுளம்பு குடம்பிகளின்
இனவிரு த்தி ஆரம்பமாவதுண்டு. ஆயினும் இந்தத் தடவை ஏப்ரல் மாதம் முதல் இருந்தே டெங்கு
நோய் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால்
டெங்கு நோயி னால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாட்டில் இன்று
அதிகரித்துள்ளது.
அடுத்து வரும் இரு மாதங்களில் ஜூன், ஜூலை மாதங்களில் டெங்கு நோயினால்
பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இருப்பதனால் அதனை தடுத்துவிடும்
நோக்கத்துடன் இந்த தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தை இந்தத் தடவை மிகவும் தீவிரமான
முறையில் கடைப்பிடிப்பதற்கான ஏற்பாடுகளை சுகாதார அமைச்சு மற்றும் உள்ளூராட்சி
மன்றங்களின் பூரண ஆதரவுடன் முடுக்கிவிடப் பட்டுள்ளன.
தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் டெங்கு நோயின் ஆபத்து குறித்து நாட்டு மக்கள்
அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடை முறையாகவே அமைந்துள்ளது. இதனால் மக்கள்
டெங்கு நோயின் ஆபத்தை நன்கு புரிந்து கொண்டு வருடம் பூராவும் தங்கள் வீடுகளின்
சுற்றுச் சூழலிலும் ஏனைய பொது இடங்களிலும் நுள ம்பு இனவிருத்தி செய்யுமென்று அவர்கள்
சந்தேகிக்கும் இடங் களை முற்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
இத்தகைய சமூக உணர்வுடன் மக்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சம்பந்தப்பட்ட
பிரதேசங்களில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகத்தர்களும் தொழிலாளர்களும்
தங்களது பூரண ஒத்து ழைப்பை அளிப்பதற்கும் சுகாதார அமைச்சர் மற்ற அமைச்சர்களு டன்
பேசி தக்க நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் அறிவிக்கப் படுகிறது.
சுனாமி அனர்த்தத்தில் இருந்தும் பயங்கரவாத அழிவில் இருந்தும் மீண்டெழுந்து தங்கள்
வாழ்க்கையை கட்டியெழுப்பும் அதே வேளை யில் நாட்டின் அபிவிருத்திக்கும்,
பொருளாதாரத்திற்கும் தங்களின் பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கும் மக்களுக்கு டெங்கு
அச் சுறுத்தல் இன்று ஒரு புதிய சவாலாக அமைந்துள்ளது. இதனை ஒழிக்கும் பொறுப்பு
அரசாங்கத்திற்கு மட்டுமன்றி மக்களுக்கும் இருக்கிறது என்பதை நாம் ஞாபகப்படுத்த
விரும்புகிறோம்.