தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டுப் பற்றுடன் இனப்பிரச்சினைக்குத் தீர்வு
காண வேண்டும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டுப் பற்றுடன்
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்
யுத்தத்தினால் இலங்கையில் இடம்பெயர்ந்த தமிழர்களின் மீள்குடியேற் றம் அவர்களுக்கான
வாழ்வாதாரம் போன்ற வசதிகளை இலங்கை அரசாங்கம் சீரான முறையில் செய்து
முடித்திருக்கின்றதா என்பதை நேரில் வந்து கண்டறிவதற்காக வந்திருக்கும் இந்திய
பாராளுமன்ற குழுவி னருக்கு இலங்கை அரசாங்கமும் பொதுமக்களும் தங்களது பூரண ஒத்து
ழைப்பை வழங்கியிருப்பது நம் நாட்டு மக்களின் நற்பண்புகளை வெளியுல கிற்கு
எடுத்துக்காட்டியுள்ளது.
இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு குறிப்பாக தமிழ்நாட்டுக்கு செல்லும் நம் நாட்டு
அரசியல் வாதிகள் அரசியலுடன் தொடர்புடைய பிரமுகர்கள் ஏன் பல்வேறு சந்தர்ப்பங்களில்
சாதாரண மக்கள் கூட இந்தியாவில் அடித்துத் துன்புறுத்தப்பட்ட பல சம்பவங்கள்
சமீபத்தில் இடம்பெற்றிருந்த போதிலும், நம் நாட்டவர்கள் அவ்விதம் குரோத உணர்வுடன்
இங்கு வரும் இந்தி யர்களை மனிதாபிமானம் அற்ற முறையில் நடத்தவில்லை. இதுவும் இல ங்கை
மக்களின் பண்டைய கலை கலாசார சம்பிரதாயங்களை பறைசாற்றுவ தாக அமைந்திருப்பது குறித்து
நாம் உண்மையிலேயே மகிழ்ச்சியடைய வேண்டும்.
இந்தியர்கள் தங்கள் நாட்டில் அரசியலில் பலதரப்பட்ட கொள்கைகளை கடைப் பிடித்து
வந்தாலும் இந்தியாவின் பொதுப் பிரச்சினைகளைப் பொருத்தமட் டில் அவர்கள் அந்தத்
தனிப்பட்ட கருத்து மோதல்களை மறந்து இந்தியர் கள் என்றே சிந்திக்கின்றார்கள்.
அதனால்தான் இலங்கைக்கு விஜயம் செய் துள்ள இந்தியப் பாராளுமன்றத் தூதுக்குழுவுக்கு
இந்திய அரசாங்கம் தங் கள் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவி திருமதி சுஸ்மா சுவராஜை
தலைவி யாக நியமித்திருந்தது.
இந்தியத் தூதுக்குழுவினர் ஏற்கனவே இலங்கையில் கலந்துகொள்ளும் நிகழ்வு கள் குறித்து
ஒரு நிகழ்ச்சித் திட்டம் உருவாக்கப்பட்டு அது இந்தியாவுக்கு முன்கூட்டியே
அறிவிக்கப்பட்டும் இருந்தது. ஆயினும் இலங்கைக்கு வந்த முதல் நாள் அன்றே இந்தியத்
தூதுக்குழுவின் தலைவி சுஸ்மா சுவராஜ் தங்களுக்கு மெனிக்பாம் முகாமுக்குச் செல்ல
வேண்டும் என்ற வேண்டு கோளை விடுத்து தாங்கள் மெனிக்பாமுக்கு போகாவிட்டால் உண்மை
நிலையை அறிந்துகொள்ள முடியாது என்ற பிடிவாதப் போக்கைக் கடைப் பிடித்திருந்தார்.
இந்தக் கோரிக்கையை வெளிநாட்டு விருந்தினர்களை நல்லமுறையில் உபசரி க்க வேண்டும் என்ற
காரணத்தினால் ஒரு மணித்தியாலத்துக்குள் இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்து,
இந்தியத் தூதுக்குழுவினரை மெனிக் பாமுக்கு அழைத்துச் சென்றது. அங்கு உள்ளவர்களுடன்
கலந்துரையாடுவ தற்கு இலங்கை அதிகாரிகளும் இராணுவத்தினரும் எவ்வித தடங்கலும்
செய்யாமல் அவர்கள் இந்தியக் குழுவினருக்கு தங்களது பூரண ஒத்துழைப் பையும் ஆதரவையும்
நல்கினார்கள்.
அதையடுத்து மீள்குடியேற்றப்பட்ட இடங்களுக்கும் சென்று யுத்தத்தினால் இடம் பெயர்ந்த
மக்களை சந்திக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்த கோரி க்கைக்கும் அரசாங்கம்
உடனடியாக இணக்கம் தெரிவித்து, புளியங்குளம் போன்ற பிரதேசங்களில்
மீள்குடியமர்த்தப்பட்ட மக்களை சென்று பார்ப்பத ற்கும் இந்தியப் பாராளுமன்ற
தூதுக்குழுவினருக்கு வசதிகளை செய்து கொடுத்தது.
இவ்விதம் சகல இடங்களையும் தங்கள் விருப்பத்திற்கமைய சென்று பார்த்த இந்தியப்
பாராளுமன்றத் தூதுக்குழுவின் அங்கத்தவரான தமிழ் நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ்
கட்சியின் உறுப்பினர் சுதர்ஸன் நாச்சியப்பன், தங்களது இந்த விஜயம் எதிர்பார்த்த
அளவுக்கு வெற்றிகரமாக அமைந்திருக்கின்றது என்றும் இங்கு யுத்தத்தினால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசாங் கம் மேற்கொண்டுவரும் புனர்வாழ்வு மற்றும்
வாழ்வாதார திட்டங்கள் குறி த்து தாங்கள் மிகவும் திருப்தியடைந்து இருப்பதாகவும்
கூறினார்.
இலங்கை வாழ் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காக வந்திருக்கும் இந்தியப் பாரா ளுமன்றத்
தூதுக்குழுவில் தமிழ் மக்களின் நன்மையில் ஆர்வம் கொண்ட வர்களைப் போன்று பொது
மேடைகளில் பேசும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும்,
கலைஞரின் திராவிட முன்னேற்றக் கழகமும் கலந்துகொள்ளாமை குறித்து பாரதிய ஜன தாக் கட்சி
கண்டனம் தெரிவித்துள்ளது. இவ்விரு கட்சிகளும் இலங்கை சென் றுள்ள தூதுக்குழுவில்
கலந்துகொள்ளாமை இந்தத் தூதுக்குழு கொடுக்கும் அறிக்கையை வலுவிழக்கச் செய்யும்
என்றும் பாரதிய ஜனதாக் கட்சி அறி வித்துள்ளது.
இலங்கைக்கு வந்திருக்கும் இந்தியப் பாராளுமன்றத் தூதுக் குழுவினர் சாதா ரண
அரசியல்வாதிகளாக நடந்துகொள்ளாமல், இந்தியாவின் இராஜதந்திரிக ளைப் போன்று
நாட்டுப்பற்றுடன் நடந்துகொண்டார்கள். அவர்கள் இந்தியா வுக்கு திரும்பிய பின்னர்
இலங்கை நிலைப்பாடு குறித்து எத்தகைய கரு த்தை வெளியிடுவார்கள் என்பதை நாம்
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நாம் ஆரம்பத்தில் கூறியதுபோல் இங்கு வந்திருக்கும் இந்தியப் பாராளுமன்றக் குழுவினர்
தங்களின் உள்நாட்டு அரசியல் பேதங்களுக்கு அப்பாற்பட்ட முறையில் இந்தியர்களாக
நாட்டுப்பற்றுடன் சிந்தித்து செயலாற்றியமை எங் கள் நாட்டில் உள்ள தேசப்பற்றற்ற,
நாட்டுக்குத் துரோகம் இழைக்கும் செய ற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு ஒரு நல்ல முன்
உதாரணமாக விளங்குகின்றது.
எங்கள் நாட்டின் அரசியல் கட்சிகளான ஜே.வி.பி., ஐக்கிய தேசியக் கட்சி, தமி ழ்த்
தேசியக் கூட்டமைப்பு போன்றவை இவ்விதம் இலங்கையர் என்ற நாட் டுப்பற்றுடன்
செயற்படாமல் இருப்பது குறித்து நாம் வேதனைப்படுகின்றோம்.
30 ஆண்டுகால யுத்தத்தினால் தங்கள் வாழ்க்கையை சீர்குலைத்து துன்பத்தில் துவண்டு
கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு விமோசனம் அளிக்கக் கூடிய வகையில் இலங்கை அரசாங்கம்
பல்வேறு புனர்வாழ்வுத் திட்டங்களை மேற் கொண்டு வருகின்ற போதிலும், அதன் உண்மையான
தாற்பரியத்தை உண ராமல் அரசாங்கத்தை எதிர்க்க வேண்டும், அரசாங்கத்தை வீழ்த்த வேண்
டும் என்ற குறுகிய சுயநல நோக்கத்துடன் நம்நாட்டு எதிர்க்கட்சிகள் நடந்து கொள்வது
உண்மையிலேயே கண்டனத்துக்குரியசெயலாகும்.சிங்கள மக்க ளைப் பிரதிநிதித்துவப்படுத்தும்
எதிர்க்கட்சிகள் இவ்விதம் நடந்துகொள் ளும் போது, அவர்களை நாம் ஓரளவு மன்னித்தாலும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற தமிழ்க் கட்சிகள் இவ்விதம் நாட்டுக்கும் தமிழ்
மக்க ளுக்கும் தீங்கிழைக்கக்கூடிய வகையில் போலியான கருத்துக்களை ஜோடி த்து
உண்மைக்குப் புறம்பான தகவல்களை இந்திய பாராளுமன்றத் தூதுக் குழுவினருக்கு
தெரிவித்து, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அரசாங்கம் செய்துவரும் நற்பணிகளுக்கு
அவப்பெயரை ஏற்படுத்துவதற்கு எடுத்து வரும் முயற்சிகளை தேசத் துரோகம் என்று நாம்
குறிப்பிட்டால், அது தவறு என்று எவரும் கூறமுடியுமா?