ஹிஜ்ரி வருடம் 1433 ஜமாதுல் ஊலா பிறை 28
நந்தன வருடம் சித்திரை மாதம் 09ம் திகதி சனிக்கிழமை
SATURDAY ,APRIL, 21, 2012
வரு. 80 இல. 94
 

பஹ்ரைனில் குண்டுவெடிப்பு: போமியுலா - 1 போட்டி இடம்பெறுமா?

பஹ்ரைனில் குண்டுவெடிப்பு: போமியுலா - 1 போட்டி இடம்பெறுமா?

போர்ஸ் இந்தியா போமியுலா - 1 அணியினர் திரும்பிக் கொண்டிருந்த போது குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இதனால் கார் பந்தயம் திட்டமிட்டபடி நடக்குமா என்று பதட்டம் ஏற்பட்டுள்ளது.

பஹ்ரைனில் ஆட்சியாளர்களுக்கு எதிராக மற்றொரு தரப்பினர் போராடி வருகின்றனர். இதனால் கடந்த ஆண்டு மார்ச்சில் இங்கு நடக்க இருந்த போமியுலா - 1 பந்தயம் ரத்துச் செய்யப்பட்டது. இந்த ஆண்டு கார் பந்தயம் வரும் 22 ஆம் திகதி நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க உலகின் பல அணிகள் இங்கு வந்துள்ளன. இந்நிலையில் பயிற்சியை முடித்து விட்டு போர்ஸ் இந்தியா அணியினர் ஹோட்டலுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கிளர்ச்சியாளர்கள் பொலிசார் இடையே மோதல் ஏற்பட கண்ணீர் புகை குண்டு வீசினர். மறுபக்கம் பெட்ரோல் குண்டு வெடித்தது. இதில் வீரர்கள் யாருக்கும் காயமில்லை. என்றாலும், இங்கிலாந்து அணியின் சில்வர்ஸ்டோன், நாடு திரும்ப முடிவு செய்துள்ளார். மற்றவர்கள் ஹோட்டலில் தொடர்ந்து தங்கவுள்ளனர். ஏனெனில் குண்டு வெடித்த இடத்திற்கும், போட்டி நடக்கவுள்ள இடத்துக்கும் 20 நிமிட பயணம் தான் என்பதால் என்ன செய்வதென்று வீரர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதனால் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

யுவராஜ் செல்லலாமா.

கார் பந்தயத்தை காண இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பஹ்ரைன் செல்ல உள்ளார். குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்பட்ட நிலையில் புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்ட யுவராஜ் சிங், அங்கு செல்வதை தவிர்த்தால் நல்லது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி