தமிழ்ப் புத்தாண்டை மாற்றிய விவகாரம் தொடர்பாக இந்திய குடியரசுக் கட்சித் தலைவர்
செ. கு. தமிழரசனின் பேச்சுக்கு தி. மு. க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து
வெளிநடப்பு செய்தனர்.
இது தொடர்பாக பேரவையில் முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துப் பேசியபோது, முன்னாள்
முதல்வர் கருணாநிதியால் மக்கள் மீது திணிக்கப்பட்ட தமிழ்ப் புத்தாண்டு சட்டமானது
முறையற்ற மரபு மீறிய, மக்கள் மனதைப் புண்படுத்துகின்ற செயல் என தெரிவித்தார்.
தமிழக சட்டப் பேரவையில் வியாழக்கிழமை நேரம் இல்லாத நேரத்தின் போது உறுப்பினர் செ.
கு. தமிழரசுன் (கே. வி. குப்பம்) பேசிய தாவது :-
தமிழரின் தொன்மையையும், தமிழக வரலாற்றின் உண்மையையும் மீட்டெடுக்கும் வகையில்
சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என அறிவித்துள்Zர்கள்.
தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் தை என்பதற்கு சட்டப் பேரவைக்கு வந்து விளக்கம் சொல்ல
இயலாத முன்ளாள் முதல்வர் கருணாநிதி வெளியில் இருந்து அறிக்கை விட்டுக்
கொணடிருக்கிறார். அதற்கான காரணத்தையும் மாற்றி மாற்றி கூறி வருகிறார்.
இதற்கு முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார். தமிழரசனின் இந்தப் பேச்சுக்கு
தி. மு. க. உறுப்பினர் சிவசங்கர் (குன்னம்) கடும் எதிர்ப்பு தெரிவித்து சில
கருத்துகளைக் கூறினார். அவரை வெளியேற்ற பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.
அப்போது முதல்வர் ஜெயலலிதா அளித்த விளக்கம் சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு
என்பதற்கான காரணங்கள் எவை என நான் எடுத்துக் கூறியது மக்கள் மனதில் ஆழமாகப்
பதிந்துள்ளது. இதைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத கருணாநிதி வீண் விதண்டாவாதங்களை
தனது கட்டுரையில் எடுத்து வைத்துள்ளார்.
கருணாநிதி தனது கட்டுரையில் சித்திரை மாதம் பெளர்ணமியன்று சித்திரை நட்சத்திரம்
வருகிறது என்றும், கார்த்திகை மாதம் பெளர்ணமியன்று கார்த்திகை நட்சத்திரம் வருகிறது
என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார். இதேபோலத்தான் ஒவ்வொரு மாதமும் பெளர்ணமியன்று வரும்
நடசத்திரங்களின் பெயர்களின் அடிப்படையில் அந்தந்த மாதம் அழைக்கப்படுகிறது.
கடந்த 2008 இல் சென்னை சங்கமம் விழாவில் பேசிய கருணாநிதி, தைத் திங்கள் முதல் நாள்
தமிழ்ப் புத்தாண்டு என விரைவில் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.