பிரதமர் மன்மோகன்சிங்கின் அசாம் வருகைக்கு எதிர்ப்பு
பிரதமர் மன்மோகன்சிங்கின் அசாம் வருகைக்கு எதிர்ப்பு
ரயில் தண்டவாளங்கள் குண்டு வைத்து தகர்ப்பு
பிரதமர் மன்மோகன் சிங் அசாம் மாநிலம் செல்கிறார். அவரது வருகைக்கு உல்பா
தீவிரவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து மிரட்டலும் விடுத்தனர். எனினும் பிரதமர் பயண
திட்டம் ரத்து செய்யப்பட வில்லை.
இந்நிலையில் உல்பா தீவிர வாதிகள் நேற்று முன்தினம் ரயில் தண்டவாளத்தை குண்டு வைத்து
தகர்த்தனர். பல அடிதூரத்துக்கு தண்டவாளம் சேதம் அடைந்தது. ஷிப்சாகர் மாவட்டத்தில்
இந்த சம்பவம் நிகழ்ந்தது.
தண்டவாளத்தில் குண்டு வெடித்த சமயத்தில் அந்த வழியாக ரயில் எதுவும் செல்லாததால்
உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
இந்த சம்பவத்தை தொடர்ந்து நீண்ட தொலைவு செல்லும் 3 விரைவு ரயில்கள் ஆங்காங்கே
நிறுத்தி வைக்கப்பட்டன. வேறு வழித்தடங்களில் செல்லும் ரயில்களும் முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக பல்வேறு ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டன.
குண்டு வைத்து தகர்க்கப்பட்ட தண்டவாளத்தை சீர்படுத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள்
உடனடியாக ஈடுபட்டனர்.
மேலும் வேறு பகுதியில் குண்டுகள் வைக்கப்பட்டு இருக்கிறதா? என்று வெடிகுண்டு
நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்யப் பட்டது.
அப்போது ஒரு இடத்தில் வெடிக்காத சக்தி வாய்ந்த குண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு
செயல் இழக்க செய்யப்பட்டது. உல்பா தீவிரவாதிகள் ஆதிக்கம் உள்ள லோயர் அசாமின்
சிராங்க் மாவட் டத்தில் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது. தண்டவாளங்களில்
அதிரடிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.