2012-02-04

  இன்றே நாட்டினைக் கட்டியெழுப்புவதற்கு திடசங்கற்பம் பூணுவோம்!

இன்றே நாட்டினைக் கட்டியெழுப்புவதற்கு திடசங்கற்பம் பூணுவோம்!

மெல்கம் கர்தினல் ரஞ்சித் ஆண்டகை

இலங்கையின் தேசிய சுதந்திர தினம் 2012 பெப்ரவரி 4 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இது இலங்கையர் என்ற வகையில் ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்வாகும். இந்த அழகிய தீவின் அதிசயிக்கத்தக்க இயற்கையின் கொடையின் பின்னுரிமையாளராக இருப்பதற்கு எமக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு நாங்கள் முதலில் நன்றி கூறுவோம்.

இந்த அதிசயம் கலாசார வேறுபாடுடைய நாடுகள், சமயங்கள் மொழிகளுடன் கலந்து இந்த நாட்டு மக்களுடன் மிகவும் பிரகாசிக்கின்றது. ஆகவே இத்தருணத்தில் எமக்கு முன்னால் உள்ள சவால் என்னவெனின் எமது தாய் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஐக்கியத்துடன் பணிசெய்வதாகும்.

இலங்கையில் சுதந்திரத்தை மலரச் செய்வதற்கு கத்தோலிக்க சமுதாயத்தினரும் பல்வேறு வழிகளில் பங்களிப்பு செய்துள்ளனர். தாய்நாட்டை அந்நிய ஏகாதிபத்தியத்தில் இருந்து பாதுகாப்பதற்கான சுதந்திரப் போராட்டத்தில் கத்தோலிக்க மக்கள் சிறப்பான பங்களிப்பை செய்துள்ளார்கள் என்பதை வரலாற்றை நோக்கும்போது மிகத் தெளிவாகத் தெரிகின்றது.

முன்பு நாங்கள் அச்சம், சந்தேகம் போன்ற அபாயகரமான சவால்களை எதிர்கொண்டோம். ஆனால் இன்று அச்சமின்றி சமாதானத்திற்கான வழியை எதிர்கொள்கின்றோம். வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதே சவாலாக உள்ளது.

நாங்கள் மனித விழுமியங்கள் ஊடாக புதிய யுகம் ஒன்று மலருவதற்கான பாதையில் பிரவேசித்துள்ளோம் என்று மெல்கம் கர்தினல் ரஞ்சித் ஆண்டகை கொழும்பு பேராயர் அவர்கள் விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பேராயரின் பொறுப்பாளர் விடுத்துள்ள செய்தி

ஒரு நாட்டின் தேசிய தினங்களானது நன்றி செலுத்தும் ஓர் தருணமாக மட்டும் கருதாது தற்சோதனையின் மட்டும் பிரதிபலிப்பின் தருணமாகவும் கருதப்படல் வேண்டும். கடந்த அறுபத்து நான்கு வருடங்களாக எமது நாடு எய்தியவைக்கு இலங்கையில் உள்ள நாம் நன்றியுடையவர்களாக இருத்தல் வேண்டும்.

ஆனால் இங்கு தவறுதல்களும் ஏற்பட்டுள்ளன என்பதோடு எமது தவறுதல்களில் பிரதிலிப்பது எமது வெற்றிகளிற்கு சமனான அல்லது அதற்கும் மேலான முக்கியத்துவத்தினை பெற வேண்டும். ஏனெனில், கடந்த காலங்களில் நாம் பின்பற்றி வந்திருக்கக் கூடிய தவறுதல்கள் மற்றும் தவறான பாதைகளில் இருந்து விலகி முன்செல்வதே நாம் முன்னேறுவதற்கான ஒரே மார்க்கமாகும்.

1948 இல் எமது நாடு காலனித்துவ ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற போது, எமது மக்கள் சட்டவாக்க மன்றத்திற்கு தமது பிரதிநிதிகளை கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக தெரிவு செய்திருந்தனர். டொனமூர் சீர்த்திருத்தத்தின் கீழ் உலகத்தில் சர்வதேச வயது வந்தோரிற்கான வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்ட முதல் நாடுகளில் ஒன்றாய் நாம் இருந்தோம்.

கல்வி இலவசமாகவும் கட்டாயமாகவும் வழங்கப்பட்டதோடு மத்திய பாடசாலைகள் திட்டமொன்று அனைவருக்கும் தரமான கல்வி வழங்கப்படுவதனை உறுதி செய்தது. சுதந்திரத்தின் பின்னர், தேசிய பல்கலைக்கழகங்களின் வளர்ச்சியானது உயர் கல்வி ஒரு சிலரிற்கு மட்டும் அடங்கி விடாத வண்ணம் உறுதி செய்தது.

தேசிய சுகாதார துறையின் வளர்ச்சி நாடு முழுவதும் கட்டுப்படியாகக் கூடிய மருத்துவ வசதிகளை உறுதி செய்தது. பெரும்பாலும் விவசாயத்தினை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தில் இருந்து பரவலாவதற்கும் முன்னேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

ஆன்மிகம், அரசியல், சமூகம் மற்றும் பொருளாதாரம் ஆகிய வாழ்வின் அனைத்து பிரிவிலும் நாட்டினைக் கட்டியெழுப்பும் பணியில் எம்மை மீள் அர்ப்பணிக்க இந்த தேசிய தினத்தை நாம் பயன்படுத்துவோமாக, எதிர்வரும் ஆண்டுகளில் சமாதானமும் ஆசிகளும் இலங்கையின் மக்களுக்கு உரித்தாக எனது வாழ்த்துக்கள்.